Posted in

7 வருஷமா விஜய் ஜெயிப்பார்னு சொல்லிருக்கேன்: என் கணிப்பை ஏன் விவாதிக்க மறுக்கிறீர்கள்? – ஜோதிடர் ரிக்கி ரத்தன் ஆவேசம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் குறித்துத் தொடர்ந்து ஜோதிடக் கணிப்புகளை வெளியிட்டு வரும் ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட், தனது சமீபத்திய காணொளியில் ஊடகங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மீது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் விஜய் தோல்வியடைவார் என்றே சித்தரித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், தான் கடந்த 7 ஆண்டுகளாக முன்வைத்து வரும் கணிப்புகள் குறித்து எந்தவொரு பத்திரிகையாளரும் தன்னிடம் நேரில் கேள்வி எழுப்பவோ அல்லது விவாதிக்கவோ முன்வரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மேலும் தனது உரையாடலில் திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ரிக்கி ரத்தன், திமுக நாத்திகம் பேசிவிட்டுத் தமிழ்நாட்டில் தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார். தான் முன்வைக்கும் கணிப்புகளை ஒரு விவாதக் கருத்தாகக் கூட ஏற்றுக்கொள்ள மறுப்பது பகுத்தறிவுக்கு எதிரானது என்று கூறிய அவர், “எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து பார்ப்பதுதானே உண்மையான பகுத்தறிவு” என வினா எழுப்பினார். வரும் அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள குரு பெயர்ச்சியைத் தொடர்ந்து கும்பம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 86 நாட்கள் சிறப்பான காலமாக அமையும் என்றும் அவர் அதில் கணித்துள்ளார்.

ஜோதிடர் ரிக்கி ரத்தனின் இந்த வீடியோ இணையதளங்களில் பரவி வரும் நிலையில், அவரது கருத்துகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.

அரசியலில் கணிப்புகளின் பங்கும் பகுத்தறிவு சார்ந்த விவாதங்களும் எந்த அளவிற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த கருத்து பரிமாற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.