உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா பயன்படுத்தி வரும் 1,300 ‘காமிகேஸ்’ (Kamikaze) தற்கொலைப்படை டிரோன்களைத் தயாரிப்பதற்குத் தேவையான 46 டன் உயர்ரக கார்பன்-ஃபைபர் மூலப்பொருட்களைப் பொதுத்துறை சீன நிறுவனம் மறைமுகமாக ரஷ்யாவிற்கு வழங்கியுள்ளது எனப் சர்வதேச ஊடக விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேசப் புலனாய்வு ஊடகமான ‘பொலிட்டிகோ’ (Politico) வெளியிட்டுள்ள கசிந்த கப்பல் போக்குவரத்து ஆவணங்களின்படி, சீன அரசுக்குச் சொந்தமான ‘ஜிலின் கெமிக்கல் ஃபைபர் குரூப்’ (Jilin Chemical Fiber Group) நிறுவனம், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரோசாட்டம் (Rosatom) நிறுவனத்தின் துணை நிறுவனத்திற்குப் பாலிஅக்ரிலோநைட்ரைல் (PAN precursor) எனும் வேதிப்பொருளை அனுப்பியுள்ளது. இந்த வேதிப்பொருள் தான் டிரோன்களின் இறக்கைகள், எஞ்சின்கள் மற்றும் எரிபொருள் தொட்டிகளைப் பலப்படுத்தும் அதிநவீன கார்பன்-ஃபைபர்களைத் தயாரிக்க முதன்மையான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
சுமார் 46 மெட்ரிக் டன் எடையுள்ள இந்த வேதிப்பொருட்கள், வழக்கமான நைலான் மற்றும் பாலியஸ்டர் போன்ற சிவில் பயன்பாட்டு செயற்கை இழைகளுக்கான தவறான சுங்கக் குறியீடுகளைப் பயன்படுத்தி, மேலைநாடுகளின் தடைகளை மீறி ரஷ்யாவின் தபார்ஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அலாபுகா-வோலோக்னோ தொழிற்சாலைக்கு ரகசியமாக அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தின் (ISIS) தலைவர் டேவிட் ஆல்ப்ரரைட், “இந்த 46 டன் மூலப்பொருளைக் கொண்டு குறைந்தபட்சம் 1,300 நீண்டதூர தற்கொலைப்படை தாக்குதல் டிரோன்களின் கட்டமைப்புகளை உருவாக்க முடியும்” என உறுதிப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மையத்தால் திரட்டப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்ற சிறப்புத் குழுவால் உறுதி செய்யப்பட்ட இந்த ஆவணங்கள், ரஷ்யாவிற்கு ராணுவப் பொருட்கள் எதுவும் வழங்கவில்லை என்ற சீனாவின் அதிகாரப்பூர்வ வாதத்தைப் பொய்யாக்கியுள்ளன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக மறுத்துள்ள வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம், “மோதலில் ஈடுபடும் எந்தவொரு தரப்பிற்கும் தாங்கள் போராயுதங்களை வழங்கவில்லை என்றும், இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதியைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தி வருவதாகவும்” விளக்கமளித்துள்ளது.
சீனா ரஷ்யா டிரோன் மூலப்பொருள் கசிவு, 1300 காமிகேஸ் டிரோன் சீனா உதவி அறிக்கை, பொலிட்டிகோ சீனா ரஷ்யா ரகசிய வர்த்தகம் 2026, ஜிலின் கெமிக்கல் ஃபைபர் ரோசாட்டம் ரஷ்யா, China Supplying Material 1300 Kamikaze Drones Russia Report, Politico China Russia Drone Carbon Fibre Supply 2026, Jilin Chemical Fiber Rosatom Russia Drone Supplies, US Sanctions China State Firm Russia Drone Material, World News Tamil, International News Tamil`