வீச்சரிவாள் உடன் வெட்ட துடிக்கும் விக்ரம்… “சியான் 62” பட போஸ்டர் இதோ!

வீச்சரிவாள் உடன் வெட்ட துடிக்கும் விக்ரம்… “சியான் 62” பட போஸ்டர் இதோ!

ஒவ்வொரு படத்திலும் தனது திறமையான விசித்திரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரள செய்பவர் விக்ரம். இவரது திறமையை பார்த்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா தெமட்டுமின்றி இந்திய சினிமாவை மிரண்டு போய் கிடக்கிறது.

பிரமிக்கத்தக்க திறமை கொண்ட விக்ரமுக்கு தொடர்ந்து அவரது படங்களை இயக்க இயக்குனர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் வித்யாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வருகிற ஏப்ரல் மாதம் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் ஏய் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அடுத்ததாக விக்ரம் தற்போது தனது 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எஸ்.யூ அருண்குமார் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தற்போது துவங்கி இருக்கும் நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது

இந்நிலையில் சீயான் 62 படத்தின் போஸ்டரை விக்ரம் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் வேஷ்டி பனியன் மட்டும் அணிந்து ஆக்ரோஷமாக வீச்சரிவாளுடன் விக்ரம் நின்றுகொண்டிருக்கிறார். பயங்கரமான சண்டை காட்சியில் இருந்து வெளியாகியுள்ள இந்த மிரட்டலான போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.