கிலோ கணக்கில் தங்க நகை… கோடியில் சொத்து – ராணி போல் வாழும் குஷ்பு!

கிலோ கணக்கில் தங்க நகை… கோடியில் சொத்து – ராணி போல் வாழும் குஷ்பு!

80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் ரஜினி,கமல், பிரபு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

80ஸ்ல் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் 90ஸ் காலகட்டம் முழுக்க கொடிகட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த குஷ்பு இதனுடையே முழுநேர அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அரசியல்வாதிகளாக வெளிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பையும் குறிப்பிட்டு இருந்தார். அதில் தன்னிடம் 8.55 கிலோ தங்கம், 78 கிலோ வெள்ளி இருப்பதாக கூறி இருந்தார். மேலும் பல சொகுசு கார்களின் மதிப்பையும் சேர்ந்து அவரிடம் 4.55 கோடிக்கு அசையும் சொத்துக்கள் இருக்கிறதாம்.