Posted in

சிஎஸ்கே அணியிலிருந்து 11 வீரர்கள் விடுவிக்கப்படும் கட்டாயம்

ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை இன்று (நவம்பர் 17) மாலைக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி குறைந்தபட்சம் 11 வீரர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது காயமடைந்த வீரர்கள் மற்றும் மாற்று வீரர்கள் உட்பட மொத்தம் 30 வீரர்கள் சென்னை அணியின் ஒப்பந்தத்தில் இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஐபிஎல் விதிகளின்படி, ஒரு அணியில் அதிகபட்சமாக 25 வீரர்களையும், அவர்களில் 8 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வைத்திருக்க அனுமதி உண்டு. ஆனால் சென்னை அணியின் தற்போதைய பட்டியலில் 11 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 30 பேர் உள்ளதால், விதிகளுக்கு உட்பட்டு அணியைச் சீரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரசாந்த் வீர், மேத்யூ ஷார்ட், மேட் ஹென்ரி, ஸ்பென்சர் ஜான்சன், ஆகாஷ் மத்வால் உள்ளிட்ட வீரர்களை அணி நிர்வாகம் விடுவிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு 11 வீரர்களை விடுவிக்கும் பட்சத்தில், அடுத்த மாதம் நடைபெற உள்ள மினி ஏலத்திற்காகச் சென்னை அணியின் கையிருப்புத் தொகை சுமார் 31.25 கோடி ரூபாயாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தத் தொகையைக் கொண்டு மினி ஏலத்தில் 4 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களைப் புதிதாக ஒப்பந்தம் செய்யச் சென்னை அணி திட்டமிட்டுள்ளது. இன்று மாலை வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ தக்கவைப்பு பட்டியலில் சிஎஸ்கே நிர்வாகத்தின் இறுதி முடிவு தெரியவரும்.