Posted in

ஸ்பெயினில் கத்தியுடன் தப்பிய நபர்: போலீஸ் சோதனையின் போது முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த காட்சி

ஸ்பெயின் நாட்டில் கத்தியைக் காட்டி மிரட்டல் விடுத்த நபர் ஒருவரைப் பிடிக்கக் காவல்துறையினர் மேற்கொண்ட இரண்டு மணி நேரப் பேச்சுவார்த்தை மற்றும் போராட்டத்திற்குப் பிறகு, அவர் கட்டடத்தின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தின் போது நிலை தடுமாறி கீழே விழுந்த போதிலும், அந்த நபர் உடனடியாக எழுந்து அதிகாரிகளை எதிர்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காவல்துறையினர் நடத்திய நடவடிக்கையின் போது கதியைக் கைவிட மறுத்த அந்த நபர், பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட முதல் மாடி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது நிலைமையைைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் டேசர் (Taser) கருவியைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் தலைகுப்புறத் தரைக்கு விழுந்தார்.

கீழே விழுந்த சில நொடிகளிலேயே எவ்விதத் தயக்கமும் இன்றி எழுந்து நின்ற அவர், தொடர்ந்தும் அதிகாரிகளை எதிர்த்துப் போராடியதாகப்
நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரைப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் விவாதித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் லத்திகளைப் பயன்படுத்தி அந்த நபரை வெற்றிகரமாகக் கைது செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.