விஜய் 69 பட இயக்குனர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

விஜய் 69 பட இயக்குனர் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, கைலா,ஸ்னேகா ,அஜ்மல் உள்ளிட்ட பல நடிக்கிறார்கள்.

இப்படத்தை வெங்கட் பிரபு பல மாதங்களாக இயக்கி வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் மும்முறமாக நடைபெற்று வருகிறது படத்தின் ரிலீஸுக்காக பட வேலைகள் படு பிஸியாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி படத்தை வெளியிடப்பட குழு முடிவு செய்துள்ளனர் .

விஜய் கோட் படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கவிருக்கிறார். அதற்கு அடுத்ததாக கடைசியாக ஒரே ஒரு திரைப்படமான 69 ஆவது படத்தில் நடித்துவிட்டு அதோடு சினிமாவிற்கு டாடா முடிவு எடுத்துவிட்டார். இப்படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து பல மாதங்களாக கேள்வி எழுந்த வந்த நிலையில்,

தற்போது இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யன் 69 படத்தை மரணிதத்தினம் இயக்கினால் நன்றாக இருக்கும் அந்த படத்தை நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என தெரிவித்தார். எனவே படத்தை இயக்கப்போவது மணிரத்தினம் எனபது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது .