Profile Form’ல் அட்ஜெஸ்ட்மென்ட்… சீரியலில் நடக்கும் கொடுமை – சீரியல் நடிகை ஓபன் டாக்!

Profile Form’ல் அட்ஜெஸ்ட்மென்ட்… சீரியலில் நடக்கும் கொடுமை – சீரியல் நடிகை ஓபன் டாக்!

சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் அட்ஜஸ்ட்மென்ட் நடக்கும் என்று நினைத்திருதலானால் அது தவறு சின்னத்திரையில் கூட சின்ன சின்ன கேரக்டர் ரோலில் நடிக்க கூட அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

அதை சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த ரேஷ்மா பிரசாத் வெளிப்படையாக பேசி இருக்கிறார். சின்னத்திரையில் பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை எல்லாம் இருக்காது என்று நினைப்பதெல்லாம் தவறு. இங்கும் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் நிறைவே நடக்கிறது.

என்னிடம் பல பேர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி வெளிப்படையாக நேரடியாகவே கேட்டிருக்காங்க நான் அவங்களுக்கு செவிசாய்க்காமல் வேண்டாம் அப்படிப்பட்ட வாய்ப்பே எனக்கு தேவையில்லை என்று ஆடிஷன் போறதையே நிறுத்திவிட்டேன். அதைவிட ஒரு அதிர்ச்சியான விஷயம் என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா…

பிரொஃபைல் ஃபார்மில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு ஆப்ஷனே இருக்கும். அதெல்லாம் கேட்டதும் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. நான் நோன்னு சொல்லியும் கூட பல பேர் என்கிட்ட அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டு வாய்ப்பு தரேன்னு சொல்லி கேக்குறாங்க. இப்படித்தான் சின்னத்திரையில் நிறைய கொடுமைகள் நடிகைகளுக்கு நடந்து கொண்டிருக்கிறது என வெளிப்படையா கூறியுள்ளார் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்.