ஈகிப்ட் நாட்டின் தலைநகரான கெய்ரோவிற்கு தெற்கே அமைந்துள்ள ஜிசா மாகாணத்தின் அல்-அயாட் (al-Ayyat) மாவட்டத்தில் இந்த ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. தென்மேற்கு மாகாணமான பயூம் (Fayoum) நோக்கிச் சென்ற ரயில் ஒன்று, அஸ்வான் நோக்கி முன்னால் சென்றுகொண்டிருந்த ரயிலின் பின்பகுதியில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலின் தாக்கம் காரணமாக ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிப் பலத்த சேதமடைந்தன.
இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 114 பேர் படுகாயமடைந்தனர் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணை நடத்தி, விபத்திற்குக் காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈகிப்ட் அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி (Abdel-Fattah el-Sissi) உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விபத்து நடந்த பகுதியில் தண்டவாளத்தில் கிடக்கும் இடிபாடுகளை அகற்றி, ரயில் சேவையை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து எகிப்திய ரயில்வே ஆணையம் மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளன.