Posted in

டிரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்! நடுங்கிப்போய் போரை நிறுத்திய ஈரான்-இஸ்ரேல் !

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில தினங்களாக உலகப் போருக்கான அச்சத்தை ஏற்படுத்திய ஈரான் – இஸ்ரேல் இடையேயான நேரடி ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அதிரடி தலையீட்டால் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த உக்கிரமான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இருதரப்பும் தங்களது ‘துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்’ என்றும் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் கடுமையான பொருளாதார மற்றும் கடல்வழி முற்றுகைக்கு அஞ்சிய ஈரான், இஸ்ரேல் மீதான தங்களது நேரடி ராணுவத் தாக்குதல்களை இப்போதைக்கு நிறுத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும், இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த அறிவிப்புக்கு இடையே இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கைதான் தற்போது பிராந்தியத்தில் நிலவும் உச்சகட்ட பதற்றத்திற்குக் காரணமாகும். “லெபனானின் தெற்குப் பகுதி மற்றும் பெய்ரூட்டின் தஹியே (Dahiyeh) மாவட்டங்களில் இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஒருவேளை லெபனான் மீது இஸ்ரேல் தனது கைவரிசையைத் தொடர்ந்து காட்டினால், இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு மிகக் கொடூரமான மற்றும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மரண அடியை இஸ்ரேல் சந்திக்க நேரிடும்” என்று ஈரானின் கூட்டு ராணுவத் தலைமையகம் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளது. லெபனானில் உள்ள தங்களது நட்பு அமைப்பான ஹெஸ்பொல்லாவை முழுமையாகப் பாதுகாக்கும் நோக்கில் ஈரான் இந்த அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

ஈரானின் இந்த மிரட்டலை வழக்கம் போலத் தங்களது கால்தூசிக்குக் கூட மதிக்காத இஸ்ரேல், லெபனான் மீதான தங்களது தாக்குதல்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று திமிராகப் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், “பெய்ரூட்டின் தஹியே பகுதியில் ஹெஸ்பொல்லாவின் இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடரும்; வடக்கு இஸ்ரேல் நகரங்கள் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மீதுதான் இஸ்ரேல் தனது இரும்புக்கரத்தைக் காட்டும்” என்று மிகக் கொடூரமாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஈரானுடன் போர் நிறுத்தப்பட்டாலும், லெபனான் மீதான இஸ்ரேலின் வன்முறைத் தாக்குதல்கள் இரட்டிப்பாகும் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்த அதிரடித் திருப்பங்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 3 சதவீதத்திற்கும் மேலாக எகிறி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய பெட்ரோகெமிக்கல் ஆலை தரைமட்டமாக்கப்பட்டதும், அதற்குப் பதிலடியாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையை ஏவுகணைகள் மூலம் துவம்சம் செய்ததும்தான் இந்த விலை உயர்வுக்கான முக்கியக் காரணமாகும். இந்த நிலையில், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இறுதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கான கடல்வழி முற்றுகை முழு வீச்சில் தொடரும் என்று டிரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளதால், மத்திய கிழக்கில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது.