வீடியோ கீழே இணைப்பு
ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் உலுக்கியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இத்தாலித் தலைநகர் ரோமிற்கு சுற்றுலா வந்த 32 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுப் பெண் ஒருவரை, சட்டவிரோதமாகக் குடியேறிய ஐந்து பேர் கொண்ட புலம்பெயர்ந்தோர் கும்பல் ஒன்று கடத்திச் சென்று, சுமார் 72 மணி நேரம் தொடர்ச்சியாக கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயல் இத்தாலிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த மே 9ஆம் தேதி பெரும் கனவுகளுடன் இத்தாலியின் ரோம் நகரத்திற்குச் சுற்றுலா வந்துள்ளார். பத்து நாட்களுக்குப் பிறகு, மே 19 அன்று இரவு ரோமின் பிரதான ரயில் நிலையமான டெர்மினி (Termini Station) அருகே உள்ள ஒரு உணவகத்தில் அவர் தனியாக இரவு உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது உணவகத்திற்கு வெளியே வந்த அந்தப் பெண்ணை ஒரு மர்ம நபர் அணுகி, போதைப்பொருள் தருவதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி நம்ப வைத்து, தந்திரமாகத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
சுமார் அரை மணி நேரம் நடந்து சென்ற பிறகு, அவர்கள் ஒரு வேன் (Van) அருகே வந்துள்ளனர். அங்கு மறைந்திருந்த மற்றொரு நபர், மின்னல் வேகத்தில் அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்றுள்ளார். தலைநகரின் கிழக்கு புறநகர் பகுதியான டோர் செர்வாராவில் உள்ள, சுமார் 22 சட்டவிரோதப் புலம்பெயர்ந்தோர்கள் ஆக்கிரமித்துத் தங்கியிருந்த ஒரு பாழடைந்த கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு அந்தப் பெண் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அடைத்து வைக்கப்பட்டு, போதைப்பொருள் கொடுக்கப்பட்டு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, ஐந்து பேர் கொண்ட காட்டுமிராண்டிக் கும்பலால் 72 மணி நேரம் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கும்பல் அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணப்பையையும் பறித்துக் கொண்டது. இறுதியாக, அந்த மிருகங்களின் பிடியில் இருந்து ஒருவழியாகத் தப்பி ஓடிவந்த அந்தப் பெண், வீதியில் ஆடைகளின்றி அரை நிர்வாண நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். அந்த வழியே வந்த இத்தாலிய கார் ஓட்டுநர் ஒருவர், சாலையில் கிடந்த பெண்ணை மீட்டு உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார். இத்தாலியின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த கொடூரக் கும்பல் குறித்த தீவிர விசாரணையில் தற்போது அந்நாட்டுப் போலீசார் இறங்கியுள்ளனர்.