Posted in

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி நகைகளை அடையாளம் காட்டினார்

மதுரை பழங்காநத்தம் தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மீனாட்சியைப் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைக் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

 

கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களுடன் மீனாட்சிக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரிடம் இருந்து பல முக்கியத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. காவல்துறையினர் நடத்திய சோதனையின் போது, மீனாட்சி அந்த நகைகளை நேரில் பார்த்து அடையாளம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ஏற்கனவே சுரேஷ் மற்றும் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நகைக் கண்டுபிடிப்பு விசாரணையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்துளது. பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டு வருவது நகைக்கடை நிர்வாகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.

மீனாட்சியிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்கும் பணிகளைத் தனிப்படைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கைப்பற்றப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும், இதில் வேறு யாருக்கெல்லாம் பங்குள்ளது என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.