Posted in

பிரிட்டனுக்குத் திரும்பும் மேகன் மார்க்கிள்! சாமிங் ‘டெம்ப்ட்ரஸ்’ கதாபாத்திரத்தில் MEGA COMEBACK கொடுக்கத் திட்டம்!

அரசு குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி கணவர் ஹாரியுடன் அமெரிக்காவில் வசித்து வந்த மேகன் மார்க்கிள், சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழுநேர நடிப்பு வாழ்க்கைக்குத் திரும்பவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் காய் ரிச்சியின் (Guy Ritchie) புகழ்பெற்ற ‘தி ஜென்டில்மேன்’ (The Gentlemen) நெட்ஃபிலிக்ஸ் தொடரின் 3-வது சீசனில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த தொடரில் பிரபுத்துவக் குடும்பத்து இளவரசர்களைத் தன் அழகால் வசியம் செய்து சிக்கலில் மாட்டிவிடும் ‘அல்டிமேட் டெம்ப்ட்ரஸ்’ (Ultimate Temptress) என்ற மிகவும் சுவாரசியமான மற்றும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க மேகனுக்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ‘சூட்ஸ்’ (Suits) தொடருக்குப் பிறகு அரச குடும்பத்து விதிகளால் நடிப்பை விட்டு விலகியிருந்த மேகனின் இந்தத் திடீர் முடிவு, திரைத்துறையிலும் ராயல் குடும்ப வட்டாரத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ‘தி ஜென்டில்மேன்’ தொடரின் முக்கியப் படப்பிடிப்புகள் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்குச் சொந்தமான புகழ்பெற்ற ‘ஹைஃபுளோவ் எஸ்டேட்’ (Highgrove Estate) அருகிலேயே நடைபெற்று வருகின்றன. அரச குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுப் பிரிந்த மேகன், மன்னரின் இருப்பிடத்திற்கு மிக அருகிலேயே படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளது பிரிட்டன் ஊடகங்களில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் மீண்டும் பிரிட்டனுக்கு இடம்பெயர திட்டமிட்டு வரும் சூழலில், மேகனின் இந்த திரைக்கம்பேக் செய்தி வெளியாகியுள்ளது. அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்து மீண்டும் ஹாலிவுட் திரைப்பயணத்தைத் தொடங்கும் மேகனின் இந்தப் புதிய அவதாரம், நெட்ஃபிலிக்ஸ் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது