Posted in

அலி காமெனி இறுதிச்சடங்கில் பங்கேற்ற மர்ம நபர் யார்? உலகையே குழப்பிய முகமூடி நபரின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!

அண்மையில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கின் போது, கறுப்பு நிற மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து நின்ற மர்ம மனிதன் யார் என்ற சர்வதேச மர்மம் தற்பொழுது விலகியுள்ளது. ஈரானின் மிக முக்கியமான தலைவர்கள் மற்றும் கமேனியின் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற அந்த ரகசிய இறுதி பிரார்த்தனையில், முன்பரிசையில் முகம் தெரியாதவாறு நின்ற அந்த நபர் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். அவர் ஈரானின் தற்போதைய புதிய ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கமேனியின் மகன் மொஜ்தபா கமேனிதான் (Mojtaba Khamenei) என்று சமூக வலைதளங்களில் பலத்த விவாதங்களும், வதந்திகளும் பரவி வந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தாக்குதலுக்குப் பிறகு புதிய தலைவரான மொஜ்தபா கமேனி இதுவரை பொதுவெளியில் தோன்றாததால், அவர் தனது அடையாளத்தை மறைத்து தாராளமாக இறுதிச்சடங்கில் கலந்து கொண்டதாகவே பலரும் நம்பினர். ஆனால், ஈரான் சர்வதேச ஊடகங்கள் மற்றும் உளவுத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, அந்த மர்ம நபர் புதிய தலைவர் மொஜ்தபா அல்ல என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் அலி கமேனியின் மூத்த பேரனான முகமது ஜவாத் கமேனி (Mohammad Javad Khamenei) ஆவார்.

முகமது ஜவாத் கமேனி, தனது தாத்தா கொல்லப்பட்ட அதே பிப்ரவரி 28 வான்வழித் தாக்குதலின் போது படுகாயமடைந்து, முகத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். அதன் காரணமாகவே அவர் தனது முக வடுக்களை மறைக்க மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து இறுதிச்சடங்கு பிரார்த்தனையில் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தாக்குதலில் தற்போதைய புதிய ஆன்மீகத் தலைவரான மொஜ்தபா கமேனியும் பலத்த காயமடைந்து முகம் சிதைந்துள்ளதால் அவர் பொதுவெளிக்கு வரவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் அமெரிக்க உளவு அமைப்புகள் கசியவிட்டுள்ளன.

ஈரான் மற்றும் ஈராக் நாடெங்கும் சுமார் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் திரண்ட இந்த ஆறு நாள் பிரம்மாண்ட இறுதி ஊர்வலத்தின் முடிவில், கமேனியின் உடல் மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா புனிதத்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்களின் புதிய தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் ஈரான் மக்கள் தவித்து வரும் வேளையில், புதிய தலைவர் மொஜ்தபா தனது தந்தையின் மரணத்திற்கு நிச்சயம் பழிவாங்கப்படும் என்று டெலிகிராம் வழியாக எழுத்துப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளார். இந்த முகமூடி மனிதனின் பின்னணி வெளிவந்துள்ள போதிலும், ஈரானின் புதிய தலைமை குறித்த மர்மம் இன்னும் சர்வதேச அரசியல் அரங்கில் நீடித்துக் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *