Posted in

சபாநாயகர் JCD பிரபாகர் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்.. உடைத்த அதிமுக MLA..!!

தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன், தவெக அரசைச் சேர்ந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருடனான தனது 30 ஆண்டுகால நட்பைப் பகிர்ந்து கொண்டதுடன், அவரது நடுநிலையான செயல்பாட்டையும் பெருந்தன்மையான குணத்தையும் மனமாரப் பாராட்டிப் பேசியது அவையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டப்பேரவையில் உரையாற்றிய ஓ.எஸ். மணியன், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரைக் “ராசிக்காரர்” எனக் குறிப்பிட்டு, 1987-ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வின் போது சிவாஜி கணேசன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த கோடிமாரி என்பவரைத் தனது கட்சியில் சேர்த்த சுவாரசியமான சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அன்றைய தினமே அவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெறும் வாய்ப்பைப் பெற்றதாகவும், மற்றவர்களுக்கு நல்வாய்ப்பை அமைத்துத் தரும் தாய் உள்ளம் கொண்டவர் ஜே.சி.டி பிரபாகர் என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும், சட்டமன்றத்திற்கு வரும்போது யாருமே பசியோடு இருக்கக் கூடாது என்ற நோக்கில் பலவகையான பலகாரங்களை அனைவருக்கும் வழங்கி மகிழும் குணம் கொண்டவர் சபாநாயகர் எனக் குறிப்பிட்ட ஓ.எஸ். மணியன், தற்போது சட்டப்பேரவை உணவகத்தில் முழுமையான மதிய உணவு வழங்கப்படுவதற்குப் பின்னால் சபாநாயகரின் உத்தரவே முக்கியக் காரணம் எனத் தெரிவித்துத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அவையை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி இரண்டு பக்கமும் நடுநிலையோடு வழிநடத்திச் செல்வதாகக் குறிப்பிட்ட அவர், வரலாற்றில் 10 முறை வெற்றிபெற்ற தலைவர்கள் இருந்தபோதிலும், இந்தியாவே போற்றும் வகையில் நேர்மையான சபாநாயகராகத் திகழும் ஜே.சி.டி பிரபாகரை உருவாக்கிய பெருமை தவெக தலைவர் முதலமைச்சர் விஜய்யையே சாரும் என வாழ்த்தித் தனது உரையை நிறைவு செய்தார்.