பிரிட்டன் நாட்டின் ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, சுமார் £16 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.170 கோடி) மதிப்புள்ள பிரிட்டன் போர் விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தீப்பிடித்து எாிந்து சாம்பலாகியுள்ளது.
பிரிட்டனில் உள்ள முக்கிய ராயல் ஏர் ஃபோர்ஸ் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிப் பணிக்காகப் புறப்பட்ட இந்த அதிநவீன போர் விமானம், ஓடுதளத்தை விட்டு மேல்நோக்கிப் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது. உடனே நிலைதடுமாறிய விமானம் தரைப்பகுதியை நோக்கி வேகமாகக் கூப்பையடித்து விழுந்ததில், மிகப்பெரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிழம்பாக மாறியது.
விமானம் தரையில் மோதி வெடிப்பதற்குச் சில வினாடிகளுக்கு முன்பாக, அதில் இருந்த விமானி (Pilot) அதிர்ஷ்டவசமாகத் தனது அவசரகால ‘இஜெக்ஷன் சீட்’ (Ejection Seat) அமைப்பைப் பயன்படுத்திப் பாராசூட் மூலம் குதித்துத் தப்பினார். லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்ததும் விமானப் படை அவசரகால மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எாிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகங்களை அணைத்தனர். போர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறா அல்லது எஞ்சின் கோளாறா என்பது குறித்துப் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் (Ministry of Defence) சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.