Posted in

தேனி சிறைக் கைதிகள் தப்பிய விவகாரம்: துணைச் சிறை அலுவலர் சஸ்பெண்ட்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 விசாரணை கைதிகள் தப்பிச் சென்றனர். கைதி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது போன்ற நாடகத்தை நம்பி சிறைக் காவலர்கள் கதவைத் திறந்தபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு கைதிகள் தப்பி ஓடினர். இந்த அசம்பாவிதச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைப் பணியில் ஏற்பட்ட கடுமையான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடமை தவறிய குற்றத்திற்காகப் பொறுப்பு துணைச் சிறை அலுவலர் என். இராமலிங்கம் என்பவரை சஸ்பெண்ட் செய்து முதலமைச்சர் விஜய் உத்தர பிறப்பித்துள்ளார்.

சிறைத் துறையில் இதுபோன்ற பாதுகாப்பு வழாச்சிகள் மற்றும் அலட்சியப் போக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும், சிறைத்துறை நிர்வாகத்தில் மாற்றம் செய்யும் வகையில் உயர்மட்ட அதிகாரிகளின் மாற்றங்கள் மற்றும் பணியிட மாறுதல்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கைதிகள் தப்பியதைத் தொடர்ந்து காவல் துறை மற்றும் சிறைத்துறை அமைப்புகளில் கூடுதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள மதுரை, திண்டுக்கல் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன் கேமராக்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உதவியுடன் தப்பிச் சென்ற பெரும்பாலான கைதிகளைக் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள மீதமுள்ள கைதிகளைப் பிடிக்கத் தனிப்படை போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்படும் கைதிகள் அனைவரும் பலத்த பாதுகாப்பு நிறைந்த உயர் பாதுகாப்புச் சிறைகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.