Posted in

முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல… வீரத் தழும்பு  – சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் சைகைக்கு டி.ஆர்.பி. ராஜா சாட்டையடி பதிலடி!

தமிழகச் சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தைக் கிண்டல் செய்யும் வகையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சைகை காட்டிப் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.

சட்டமன்றத்தில் சர்க்காரியா கமிஷன் அறிக்கை மற்றும் அவசரகால நிலை (மிசா) குறித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “மிசாவைப் பார்த்தவர்கள்… மிசாவைப் பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள்; மிசா பற்றிய வரலாறு அனைவருக்கும் தெரியும்” எனக் கூறி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காட்டிப் பேசினார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உருவக் கேலி செய்யும் நோக்கில், அவசரநிலைக் காலத்தில் மிசா சிறைவாசத்தில் அவர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தழும்பைக் கிண்டலிக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் இவ்வாறு நடந்துகொண்டதாக திமுகவினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள திமுகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா, “தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல; அதிகார வெறியில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் நெஞ்சுரத்துடன் அடக்குமுறையை எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு ஜனநாயக விபத்தில் முதலமைச்சரான நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்றுப் பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளமே அந்தத் தழும்பு” என்றும் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார். ஜனநாயகத்திற்காக ஏற்​றுக் கொண்ட தியாக வரலாற்றை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு என்றும் அவர் பதிவிட்டுள்ளதால், தமிழக அரசியல் களத்தில் இரு கட்சிகளிடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

டி ஆர்பி ராஜா பதிலடி முதல்வர் விஜய், மு கே ஸ்டாலின் தழும்பு மிசா விஜய் சைகை, சட்டமன்றத்தில் விஜய் பேச்சு திமுக எதிர்ப்பு 2026, தவெக திமுக மோதல் மிசா வரலாற்று விவாதம், TRB Raja Reply CM Vijay Assembly Speech September 2026, MK Stalin Scar TRB Raja Response CM Vijay, CM Vijay MISA Gestures Assembly Speech Controverys, TVK DMK Clash Assembly Speech September 2026, Tamil Nadu News Tamil, TN Politics News Tamil`