ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திகழ்த்துப்போன திரிஷா – வைரல் வீடியோ!

ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திகழ்த்துப்போன திரிஷா – வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை திரிஷா கிட்டத்தட்ட 40 வயதாகியும் இன்னும் மவுஸ் குறையாமல் அதே மவுஸுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இன்றும் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக தற்போது திரிஷா முன்னிடத்தில் இருக்கிறார். இவர் கடைசியாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்து சில வருடங்களாகவே த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அவர் தற்போது கமல்ஹாசன் உடன் தக் லைஃப் , அஜித்துடன் விடாமுயற்சி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் திரிஷா மலையாள திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது அங்கு த்ரிஷா கேரவனில் இருக்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு முந்தி அடித்தனர். அப்போது திரிஷா கேரவனை திறந்து விட்டு வெளியே வந்து நின்று அவர்களுக்கு கை அசைத்தபடி தனது அன்பை வெளிப்படுத்தினார். ரசிகர்களின் கரகோஷங்களை பார்த்து திரிஷா திகைத்துப் போனார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.