Posted in

பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகம்: தவெக அரசுக்குச் சவாலாகும் மீனவர்கள் எதிர்ப்பு!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப் புதிய தவெக அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ள பகுதி மீனவ மக்களுக்குக் குடியிருப்புகள் கட்டப்பட வேண்டிய இடம் என்றும், கடலோரப் பகுதியைப் பாதிக்கும் என்றும் கூறி அப்பகுதி மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தித் தொடர் எதிர்ப்பைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் மீனவர் வாக்கு வங்கியைப் பாதிக்கும் ஆபத்து நிலவுவதால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

மயிலை அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ அழைப்பு வரவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடக்கவிருந்த சமரசப் பேச்சுவார்த்தைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, பாதிக்கப்பட்ட மீனவக் பிரதிநிதிகளிடம் வெளிப்படையான கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாப்பதா அல்லது அறிவிக்கப்பட்ட இடங்களில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதா என்ற இக்கட்டான சூழல் நிலவி வருகிறது.

அரசு தரப்பில் மீனவர்களுடன் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவை எடுப்பதற்கான திட்டமிடல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.