ஈராணின் ஆயுதக் கப்பலை மடக்கிய அமெரிக்கா அதில் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியது !

ஈராணின் ஆயுதக் கப்பலை மடக்கிய அமெரிக்கா அதில் உள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியது !

இது எப்படி இருக்கு ? தெருவில் உள்ள தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு அடித்த கதையாக இருக்கிறது இந்த விடையம். ஈரான் ஒரு கப்பலில் பல ஆயுதங்களை எமன் நாட்டுக்கு அனுப்பியுள்ளது. அதில் 5,000 AK-47 ரக துப்பாக்கிகள், 5 லட்சம் தோட்டாக்கள் அடங்கலாக பல ஆயுதங்கள் இருந்துள்ளது. இதனை கடந்த வருடம் அமெரிக்க போர் கப்பல் மடக்கிப் பிடித்தது. குறித்த ஈராணியக் கப்பலையும் அமெரிக்கா மடக்கி கொண்டு சென்றது.

தற்போது அதில் உள்ள அனைத்து ஆயுதங்களையும் உக்ரைனுக்கு வழங்கி விட்டது. இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு நேற்றைய தினம்(23) உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை தான் வழித் தேங்காயை எடுத்து தெருப் பிள்ளையாருக்கு உடைத்த கதை என்று சொல்வார்களோ தெரியவில்லை.