Posted in

வி.சி.க-வை “வேசி” என வர்ணித்த திமுக ஆ.ராசா? பெரும் சிக்கலில் ஸ்டாலின்!

“பூ முடித்தவனை புறம் தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை…” – அதாவது மணம் முடித்த கணவனை விட்டு, சிற்றின்பத்திற்காக வேறு ஒருவரிடம் செல்லும் பெண்கள் தவறானவர்கள் அல்ல என்கிறது இதன் பொருள். இது பெண்களை மட்டும் அவமானப்படுத்தும் வரிகளாக அமையவில்லை; மாறாக, ஒட்டுமொத்தப் பெண்களையும் கேவலப்படுத்தும் வரிகளாக உள்ளன.

இதனை ஆ.ராசா வெளியிடக் காரணம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தவெக கூட்டணியில் இணைந்ததுதான் எனக் கூறப்படுகிறது. இதுநாள் வரை ‘வெளியே இருந்து ஆதரவு’ என்று கூறிவந்த தொல்.திருமாவளவன், திடீரென நேற்று ‘ஆட்சியில் பங்கு’ என்ற விஜய்யின் கருத்தை ஆதரித்து, தவெக-வின் தோழமைக் கட்சியாகத் தங்களை இணைத்துக் கொண்டார்.

இதனால் வன்னி அரசுக்குத் தவெக தரப்பில் அமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், திமுக கூட்டணி சுக்குநூறாக உடைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் ஓரளவிற்கு வாக்கு வங்கியோடு இருக்கும் ஒரே ஒரு கட்சி, தேமுதிக மட்டுமே என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில்தான், விசிகவினரை மறைமுகமாக இப்படியொரு வார்த்தையால் விமர்சித்த ஆ.ராசா மீது தவெகவினரும் விசிகவினரும் கடுமையான கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடே பரபரப்பாகிவிட்டது. சிக்கல் மேலும் அதிகரிக்கவே, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கனிமொழி மூலமாக ஆ.ராசாவைத் தொடர்புகொண்டு, அந்தப் பதிவை உடனே நீக்கக் கோரியுள்ளார். அதுமட்டுமல்லாமல், உடனடியாக திமுக தரப்பில் இருந்து மன்னிப்பு அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், விசிகவினர் இதனை இத்துடன் விடுவதாக இல்லை; இருதரப்பு மோதல் தொடர்ந்து நீடிக்கிறது. ஒருபக்கம் விஜய் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகளை அரவணைத்துச் செல்ல, மறுமுனையோ பெரும் அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது.