“வீர தீர சூரன்” வெறித்தனமா வெளியான “சியான் 62” டீசர்!

“வீர தீர சூரன்” வெறித்தனமா வெளியான “சியான் 62” டீசர்!

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகரான சியான் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் வித்யாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். மும்முரமாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது.வருகிற ஏப்ரல் மாதம் இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் தற்போது தனது 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை எஸ்.யூ அருண்குமார் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க உள்ளார். இப்படத்தின் முதல் கட்ட வேலைகள் தற்போது துவங்கி இருக்கும் அண்மையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் வெறித்தனமான டீசர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. படத்திற்கு “வீர தீர சூரன்” என பெயரிட்டுள்ளனர். இதில் விக்ரம், அரிவாள், நாட்டுத்துப்பாக்கி என வெட்டு, குத்து , கொலை என அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து மிரட்டியுள்ளார்.

இதோ அந்த வீடியோ: