Posted in

சென்னை உட்பட 16 தொகுதிகளில் திமுக தேல்வி- உளவுத்துறை அறிக்கை அமித் ஷாவுக்கு பறந்தது !

📅 வெளியானது: April 15, 2026

சென்னையில் உள்ள மற்றும் சுற்றுப் புறங்களில் உள்ள சுமார் 16 தொகுதிகளையும் TVK கைப்பற்றும் என்று உளவுத்துறை அறிக்கை ஒன்று அமித் ஷாவுக்குப் பறந்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. திமுகவில் உள்ள சில முக்கிய MLA-களை இனி கைது செய்ய முடியும் என்ற தகவல் தான் அது. அதாவது, அவர்கள் இந்த 2026 தேர்தலில் வெல்லப் போவதில்லை என்றும், அதனால் அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளுக்காக அவர்களை இலகுவாகக் கைது செய்ய முடியும் என்றும் மத்திய உளவுத்துறை அமித் ஷாவுக்குத் தகவல் அனுப்பியுள்ளது.

இன்றைய தினம், விஜய் அவர்கள் சென்னையில் நடத்திய ரோடு ஷோவால், சென்னையே முற்று முழுதாக ஸ்தம்பித்துள்ளது. மக்கள் காலையில் 10 மணியளவில் இருந்தே கூடி, கொழுத்தும் வெயிலில் காத்து நின்று விஜயைக் கண்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தொடர்மாடிகளில் இருந்து மக்கள் மலர்களைத் தூவி, உற்சாக வரவேற்பு கொடுத்து வரும் நிலையில், சென்னையில் TVK கட்சிக்குக் கடும் ஆதரவு இருப்பது மிகவும் தெளிவாகப் புரிகிறது.

எழும்பூர், தியாகராய நகர், வள்ளுவர் கோட்டம் என்று பல இடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விஜயை வரவேற்று வருகிறார்கள். இந்த மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது, இதுவரை எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் இதுபோல கூட்டம் சேர்ந்ததில்லை எனப் பல ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இதேவேளை, மோடி அவர்கள் நடத்திய ரோடு ஷோவில் மக்கள் அதிகம் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இம்முறை சென்னையைப் பொறுத்தவரை, TVK மற்றும் DMK கட்சிகளுக்கு இடையேதான் பெரும் போட்டி அமைய உள்ளது. இது இவ்வாறு இருக்க, நாம் தமிழர் கட்சி இம்முறை நடக்க உள்ள தேர்தலில் பெரும் சரிவைச் சந்தித்து 4% சதவீத வாக்குகளையே பெறும் என்று கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளதும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. நாம் தமிழர் அமைப்பில் இருந்த பல இளைஞர்கள் தற்போது TVK கட்சியில் இணைந்து வருவது, பெரும் அதிர்ச்சிகரமான விஷயம் ஆகும்.