‘சொல் அல்ல, செயல்!’ என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அரசாணைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த 10 நாட்களில் மட்டும் விவசாயிகள், மாணவர்கள், காவல்துறையினர் எனப் பலதரப்பட்ட மக்களுக்காகத் தொடர்ச்சியாக 9 முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் மற்றும் காவல நிலையங்களின் நிர்வாக நிதியை உயர்த்தி வழங்கியது ஆகியவை குறிப்பிடத்தக்க அறிவிப்புகளாக அமைந்துள்ளன.
வெறும் 10 நாட்களுக்குள் பல்வேறு துறைகளை உள்ளடக்கி வரிசையாக வெளியிடப்பட்டுள்ள இந்த 9 நலத்திட்டங்கள் அரசின் அதிவிரைவான செயல்பாட்டுக்குச் சான்றாக அமைந்துள்ளதாக தவெக தொண்டர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை விரைவாகச் செயல்படுத்தி வரும் முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கைகளைப் பாராட்டி தவெக ஆதரவாளர்கள் இச்செய்தியை சமூக வலைதளங்களில் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இதர துறைகளிலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்த அரசிடமிருந்து உரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவித்துள்ள இந்த 9 நலத்திட்டங்களும் உரிய காலக்கெடுவுக்குள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்துத் துறை சார்ந்த பயனாளிகளுக்கும் இத்திட்டங்களின் பலன்கள் தடையின்றிச் சென்று சேருவதை உறுதிசெய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.