அரசியல் களம் மிக வேகமாக மாறி வருகிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அவர்கள் சற்று முன்னர், “விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை” என்று கூறித் தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டார். இது இவ்வாறு இருக்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இதேவேளை, டெல்லியில் இருந்து ராகுல் காந்தி நேரடியாக விஜய்யுடன் தொலைபேசியில் பேசி வாழ்த்துத் தெரிவித்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணியும் விஜய்க்கு ஆதரவு என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. (பட்ட கடனை திருப்பி கொடுக்க வேண்டுமே.. அதாவது ராமதாசின் மகள் எடுத்த திரைப்படத்தை புரோமோட் செய்து கொடுத்ததே விஜய் தானே.)
மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டில் உள்ளார்கள். இதன்படி காங்கிரஸின் 5 இடங்கள், பாமக-வின் 4 இடங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் 4 இடங்கள் மற்றும் தேமுதிக-வின் 1 இடம் என்று பார்த்தால் கூட, 14 எம்.எல்.ஏ-க்கள் வந்துவிடுவார்கள். மேலும் சொல்லப்போனால், விடுதலைச் சிறுத்தைகள் வெளியே இருந்து ஆதரவு கொடுத்தால், மொத்தமாக 16 இடங்களை விஜய் பெற்றுவிடுவார். இதன் மூலம் ஒரு நிலையான ஆட்சி அமைந்துவிடும்.
ஒரு நிலையான ஆட்சி என்பது மட்டுமல்லாமல், மத வேறுபாடுகள் மற்றும் சாதி வேறுபாடற்ற ஒரு தேசீயக் கூட்டணி உருவாகிவிடும். இது திமுக கட்சிக்கு விழும் பேரிடியாக இருக்கும். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தால், தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பெரும் சக்தியாக TVK கட்சி உருப்பெற்றுவிடும்.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அடிப்படையில், திமுக அல்லது அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கட்சி தாவலில் ஈடுபட முடியாது. எனவே, அந்தத் திராவிடக் கட்சிகளில் இருந்து எவரும் விஜய் பக்கம் உடனடியாகத் தாவ முடியாது. தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், விஜய் சற்று முன்னர் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் 2 வார அவகாசத்தை அவர் கோரியுள்ளார். இந்த 2 வார காலத்தில், அவர் 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஆளுநரிடம் நிரூபிப்பார். அதனைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார். “ஜோசப் விஜய் ஆகிய நான், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பால் நம்பிக்கை கொண்டு…” என்று விஜய் உறுதிமொழி ஏற்பது விண்ணைப் பிளக்கும் ஒலியாக இருக்கும்.
லட்சக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பதவியேற்பு விழாவை மிகப்பிரம்மாண்டமாக நடத்த TVK கட்சி ஒருபுறம் தயாராகி வருகிறது. எனவே, இன்னும் 2 வாரங்களில் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கலாம்!
