கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு புறம் இருக்க, மறு புறத்தில் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் நிலைகள் மீது சுமார் 4 முறை வெற்றிகர தாக்குதலை பிரித்தானியா நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மாதம் தோறும் பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு மையம், சில தகவல்களை டீ -கிளாசிபைட்(Declassified) என்று சொல்லப்படும், மக்களுக்கு அறிவிக்கப்படும் செய்தியாக வெளியிட்டு வருகிறது. அதில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள அரசாங்கத்திற்கு உதவும் வகையில், ஈராக்கில் நிலை கொண்டுள்ள தமது படைகள். ஏக காலத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும். அவ்வாறு ஏப்பிரல் மாதம் வெற்றிகரமாக 4 தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும். இதனால் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் நாசமாக்கட்டதாகவும் பிரித்தானியா மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Tags:
recent