GO BACK

சீனாவின் ரகசிய பரிசோதனையா ? அடுத்தடுத்து விழுந்த அமெரிக்காவின் பல போர் விமானங்கள் (VIDEO)


 மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குவைத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பல போர் விமானங்கள் (Several US Fighter Jets) இன்று (மார்ச் 2, 2026) அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி விழுந்த சம்பவம் உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. இதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது, எதிரி நாட்டு விமானம் எனக் கருதிய அமெரிக்க சாட்டலைட் திடீரென அக்டிவேட் செய்த EMP எனப்படும் மின் காந்த அலையை பாச்சியதால் , பறந்துகொண்டு இருந்த பல அமெரிக்க விமானங்கள் திடீரென எஞ்சின் இயங்காமல் கீழே விழுந்தது என்பது ஒரு கருத்து.  இதனை விட இது சீனாவின் ஒரு சதியாக இருக்கமால் என்று சில அமெரிக்க நிபுணர்கள் ஏற்கனவே பதிவிட்டு வருகிறார்கள். 

குவைத்தின் அலி அல் சேலம் (Ali Al Salem) விமானப்படைத் தளத்திற்கு அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள் உள்ளிட்ட விமானங்கள் தீப்பிடித்து எரிந்தபடி கீழே விழுந்தன. இந்த அதிர்ச்சி தரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள குவைத் பாதுகாப்பு அமைச்சகம், விபத்துக்குள்ளான அனைத்து விமானங்களிலும் இருந்த வீரர்கள் (Crew members) பாராசூட் மூலம் குதித்து பாதுகாப்பாக உயிர் தப்பியதாகத் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் அமெரிக்கப் படைகள் உச்சக்கட்ட தயார் நிலையில் இருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்துப் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்கத் தயாராக இருந்த 'பேட்ரியாட்' (Patriot) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு, தவறுதலாகத் தனது சொந்த நாட்டு விமானங்களையே சுட்டு வீழ்த்தியிருக்கலாம் (Friendly Fire) என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது ஏதேனும் சதிவேலைகள் பின்னணியில் உள்ளனவா என்பது குறித்து அமெரிக்கப் போர் துறை (Department of War) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பலம் வாய்ந்த போர் விமானங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த விபத்து குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குவைத் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஒட்டுமொத்தத்தில் அமெரிக்கா தற்போது அரண்டு போய் உள்ளது. திடீரென இத்தனை போர் விமானங்கள் செயல் இழந்து விழுந்துள்ளது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. காகங்கள் செய்து விழுவது போல இந்த போர் விமானங்கள் நிலத்தில் விழுந்து வெடித்துள்ளது.