சீன படைவீரர்கள் எல்லோரும் போருக்கு தயாராக இருங்கள் என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. இதற்கு நிறைய பின்னணிகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.போருக்கு தயாராக இருங்கள்.. உங்கள் பயிற்சியை அதிகப்படுத்துங்கள். படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தங்கள் பலத்தை அவர்கள் அதிகரிக்க வேண்டும்.
போருக்கான ஆயத்தங்களை ராணுவம் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ நடவடிக்கைகளை செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கான முழுமையான பயிற்சிகளை நாம் செய்ய வேண்டும்.. இப்படி சொன்னது அமெரிக்க அதிபர் டிரம்ப்போ.. வடகொரியா அதிபர் கிம்மோ இல்லை. சீன அதிபர் ஜிங்பிங்!
போருக்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். மிக மோசமான விஷயத்திற்கு தயாராக இருக்க வேண்டும். நாம் வித்தியாசமான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டு ராணுவத்தில் நாம் புரட்சியை கொண்டு வர வேண்டும். நமது பலத்தை ஒற்றுமையை நிரூபிக்க வேண்டிய நேரம் இது என்று ஜி ஜிங்பிங் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் இந்தியாவும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.சீன அதிபரின் இந்த உத்தரவுக்கு இந்தியா மீதான கோபமும் ஒரு காரணம் ஆகும்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. இது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது. அங்கு இரண்டு நாட்டு படைகளும் ராணுவத்தை குவித்து வருகிறது. அதோடு சீனா தனது போர் விமானங்களை குவித்து வருகிறது.
பிரதமர் மோடியும் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். இதனால் அங்கு போர் மூளும் அபாயம் உள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அது பெரிய போராக இருக்கும். இந்த போருக்கு தயார் ஆகும் வகையில் ஜிங்பிங் இப்படி கூறியுள்ளார். இது போருக்கான அழைப்பு என்று கூறுகிறார்கள். இந்தியாவிற்கு எதிராக அவர் தனது வேலையை காட்டுகிறார் என்கிறார்கள்.
ஆனால் இன்னொரு பக்கம் இதற்கு அமேரிக்கதான் காரணம் என்கிறார்கள். தென் சீன கடல் எல்லையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சிறு சிறு சண்டை நடந்து வருகிறது. இரண்டு நாட்டு படைகளும் அங்கே போர் கப்பலை குவித்து வருகிறது. அங்கே சீனா அத்துமீறி போர் கப்பல்களை குவித்து உள்ளதாக கூறி அமெரிக்கா இப்படி படைகளை குவித்து வருகிறது. மலேசியாவின் எண்ணெய் கிணறுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா இப்படி செய்கிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
Tags:
recent