2030ல் சாவே இல்லாத மனிதர்கள் இருப்பார்கள் ஆச்சரியமான கண்டு பிடிப்பு IMMORTALITY by 2030

 


2030ம் ஆண்டு, தொடக்கம் மனிதர்கள் இறக்காமல் வாழ முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா ? ஆம் உண்மை தான். சாவே இல்லாத மனிதர்..  அதாவது ""சிரஞ்ஜீவி"" என்பது, எமது புராணங்களில் 5,000 வருடங்களுக்கு முன்னரே இந்தச் சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளை தவிர மனிதர்களால் இறக்காமல் வாழ முடியும். அவர்கள் அந்த நிலையை ஒரு சக்திகொண்டு அடைந்தார்கள் என்று பல புராணங்களில் இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது நிஜமாக மாறவுள்ளது. காரணம் அமெரிக்காவில் உள்ள, Ray Kurzweil என்ற விஞ்ஞானி 86% சதவீகிதம் வெற்றி பெற்றுள்ளார்.

 சாவு என்றால் என்ன ? மனிதனின் இதயம் நின்றுவிடுவது. இதனால் ரத்த ஓட்டம் நின்றுவிடும். மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால். அதில் உள்ள பல ஆயிரம் கோடி நினைவு செல்கள் அழிந்து விடும். நினைவு அழிவது என்பது தான் இறப்பது ஆகும். ஆனால் இந்த நினைவு செல்களை, பத்திரமாக வெளியே எடுத்து, அல்லது அந்த நினைவு செல்களை எலக்ரான்களாக மாற்றி ஒரு கணனி போன்ற ஒன்றில் சேமிக்க முடியும் என்பதனை தற்போது கண்டு பிடித்துவிட்டார்கள். இதில் விஞ்ஞானிகள் 86% விகிதம் வெற்றிபெற்றது, உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 நாம் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது, மூளையில் உள்ள நினைவு செல்களோடு எலக்ரானிக் மூலம் தொடர்புகொண்டு அத்தனை ஞாபகங்களை ஒரு கணனிக்கு மாற்ற முடியும். ஆனால் அந்த கணனி ஒரு மூளையைப் போல இயங்க வேண்டும் அல்லவா ? அதற்கு கண்கள் தேவை காதுகளும் தேவை. மேற்படி இறந்த பின்னர் நடக்கும் சம்பவங்களையும், அது தொடர்ச்சியாக பதிய வேண்டும். அந்த வகையில் எமது செத்த வீட்டிற்கு நாமே சென்று. அது எப்படி நடக்கிறது என்பதனைக் கூட பார்க்க முடியும். அந்த கணனியை நாம் எங்கே கொண்டு சென்றாலும், அதனால் பார்க்கவும், கேட்க்கவும் உணரவும் முடியும். நினைத்துப் பார்க்கவே இது ஒரு புதுமையான விடையம்.

 இன்னும் 7 வருடங்களில் அதாவது 2030ல் இது 100% சத விகிதம் சாத்தியம் என்று, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். மூளையோடு தொடர்பை ஏற்படுத்தி ஞாபகங்களை பிரதி எடுக்க முடியும். அத்தோடு அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதே பாக்கி என்கிறார்கள். அதனையும் வடிவமைத்தால் போதும். முதல் கட்ட பரிசோதனைகள் ஆரம்பமாகிவிடும். அதன் பின்னர் பெரும் செல்வந்தர்கள், நான் நீ என்று முந்தியடித்துக்கொண்டு பதிவு செய்வார்கள். உலகம் எதனை நோக்கிச் செல்கிறது என்று பார்த்தீர்களா ?

Post a Comment

Previous Post Next Post