லண்டனில் உள்ள தமிழர்களிடம் காசைக் கறக்க, சந்திப்பு என்ற போர்வையில் வலம் வந்துகொண்டு இருக்கிறார் கஜேந்திரகுமார் MP. நேற்று முன் தினம் லண்டனில் நடந்த சந்திப்பு ஒன்றில் மிக சொற்பமான ஆட்களே கலந்து கொண்டார்கள். இதில் ஒரு ஈழத் தமிழ் செயல்பாட்டாளர் எழுந்து ஒரு கேள்வியைக் கேட்டார். கடந்த 13 வருடங்களாக நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்று. அவர் கேட்டதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் உடனே கீரியைக் கண்ட பாம்பு போல படம் எடுத்து ஆடிய கஜேந்திரகுமார் MP, முதலில் நீ எந்த அமைப்பை சார்ந்தவர் என்று சொல்லும் என்று கேட்டு பெரும் ரகளையில் ஈடுபட்டார்.
BTF ஆ, இல்லை நாடு கடந்த அரசா யார் நீர் என்று கேட்டு, ஏதோ ரவுடி பேசுவது போல மிக அநாகரீகமாக நடந்துகொண்டார். சந்திப்பு என்று வந்தால் மக்கள் கேட்க்கும் கேள்விக்கு விடை சொல்லவேண்டியது தானே.. எதற்காக இந்த வீண் விதண்டா வாதம் ? என்று லண்டன் தமிழர்கள் பலர் விசனமடைந்துள்ளார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னர் போல இல்லை என்று, அவரது ஆதரவாளர்களே நினைக்கும் அளவுக்கு மிகவும் அருவருக்கத் தக்க செயலில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
ஒட்டு மொத்தத்தில் கஜேந்திரகுமார் MP லண்டன் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்க முற்பட்டு. அது பலிக்காமல் போகவே அந்தக் கடுப்பில் உள்ளார் என்பது தெளிவாகப் புரிகிறது. தெனாவட்டாக பேசும் வீடியோ கீழே இணைக்கபப்ட்டுள்ளது பாருங்கள்.