பிரித்தானியாவின் லீட்ஸ் பகுதியில்,
தனது மனைவியை
நாசூக்காக கூட்டிச்
சென்று. 50 அடி உயரமான இடத்தில் இருந்து
தள்ளிவிட்டுக் கொலை செய்துள்ளார் அன்வர் என்னும்
29வயது இளைஞர்.
பாஃசியா என்ற
33 வயதுப் பெண்ணை
அன்வர் திருமணம்
செய்துகொண்டார். இதனை அடுத்து பாஃசியா கர்பமானார்.
இவர்களுக்கு உள்ளே என்ன தகறாறு என்று
தெரியவில்லை. ஆனால் வா நடந்து செல்லலாம்.
நடந்தால் உனக்கு
நல்லது என்று
கூறிய அன்வர்,
தனது மனைவியை
அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் யாரும் இல்லாத
ஒரு இடமாகப்
பார்த்து மனைவியை
தள்ளிவிட்டுள்ளார். 50 அடி பள்ளத்தில்
விழுந்த பாஃசியா
பல காயங்கள்
மற்றும் எலும்பு
முறிவுக்கு ஆளாக உருக்கு போராடிக் கொண்டு
இருந்தார். கர்ப்பத்தில் இருந்த சிசு இறந்துவிட்டது.
இன் நிலையில்
அவரும் உயிரிழந்தார்.
ஆனால் அன்வர்
இது எதுவும்
தனக்குத் தெரியாது
என்றும். சம்பவம்
தினம் அன்று,
பாஃசியா தனியாக
நடந்து சென்று
தவறுதலாக சறுக்கி
விழுந்து இருக்கலாம்
என்று கதை
அளந்துள்ளார் பொலிசாரிடம். ஆனால் பொலிசாருக்கு ஏற்பட்ட
சந்தேகம் காரணமாக
அவர்கள் மேலும்
விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
இறுதியாக சிக்கினார் அன்வர்.
அதாவது அன்வர்
தனது மனைவியை
கூட்டிக் கொண்டு
நடந்து செல்லும்
காட்சி CCTV ஒன்றில் பதிவாகி உள்ளது. சொல்லப்
போனால் அந்த
இடத்தில் CCTV கமரா இருப்பதே யாருக்கும் தெரியாது
என்றே சொல்லலாம்.
அதில் பாஃசியா
இறக்க முன்னர்
செல்லும் காட்சிகள்
தெளிவாகப் பதிவாகி
இருந்தது. 7 பேர் அடங்கிய யூரிகள் குழு
இதனைப் பார்த்த
உடனே, அன்வர்
குற்றவாளி என்ற
தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.
தற்போது அவருக்கு
நீதிபதி தண்டனைக்
காலத்தை அறிவிக்க
உள்ளார். இது
இவ்வாறு இருக்க,
"உன்னை நம்பித் தானே அவள் பின்
தொடர்ந்து வந்தாள்"
இப்படிச் செய்துவிட்டாயே
என்று பாஃசியாவின்
அம்மா நீதிமன்றில்
கதறி கண்ணீர்
விட்ட காட்சிகள்...
அனைவரது கண்களையும்
ஈரமாக்கிவிட்டது.