லியோ படப்பிடிப்பு குழுவிடம் இருந்து லீக் ஆன படம் என்று சொல்லி ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அது மிக முக்கிய முன்னணி நடிகர் விஜய் அவர்கள் ஒரு பைத்தியக்காரன் ரேஞ்சுக்கு காவடி எடுப்பது போல இருக்கிறார். ஆஹா என்ன நடிப்பு என்ன நடிப்பு என்று கூறி விஜய் ரசிகர்கள் போற்றி வருகிறார்கள். ஆனால் தல அஜித் ரசிகர்கள். என்னடா இது சுத்த பைத்தியக்காரன் போல உள்ளாரே ? இதுக்கு தல அஜித் எவ்வளவோ தேவலாம் என்று கூறி கலாய்த்து வருகிறார்கள்.
லியோ படம் ஆரம்பமான நாள் முதலாகவே ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு அப்டேட் கொடுத்து, படத்தின் எதிர்பார்பை கூட்டி வருகிறது படக் குழு. முதலில் காஷ்மீர் என்றார்கள். பின்னர் குளிர் என்றார்கள், அதன் பின்னர் அர்ஜுன் நடிக்கிறார் என்றார்கள். தற்போது கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் பைத்தியக்காரணாக வருகிறார் என்கிறார்கள். இனி என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ தெரியவில்லை. பெரும் ஆலபனையாக இருக்கே ?
படம் மட்டும் சொதப்பலாக இருக்கட்டும், பின்னர் தான் தெரியும். பீஸ்ட் படம் போல கடைசியில் பைஃட்டர் ஜெட்டை எடுத்துக் கொண்டு ஆக்பானிஸ்தான், ககாகிஸ்தான் போய் எதிரியை ஏற்றி வருகிறாரோ தெரியவில்லை.