6ம் திகதி முடி சூட்டு விழாவை எப்படிப் பார்பது ? எந்த வழியால் சார்ளஸ் செல்ல உள்ளார் என்ற தகவல்..



இது போக சுமார் 260 வருட பழமையான குதிரை வண்டி ஒன்றில் தான், இம்முறை மன்னர் சார்ளஸ் வருகிறார். இந்த குதிரை வண்டி முழுக்க முழுக்க தங்கத்தினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க விடையம். அதன் விலை மட்டுமே..6 மில்லியன் பவுண்டுகள் ஆகும்..

பிரித்தானியா மாமன்னர் சார்ளஸ் வரும் 6ம் திகதி முடி சூட உள்ளார். இது அரச விடுமுறை நாள் மட்டும் அல்ல. பெரும் விழாவாக கொண்டாடப்பட உள்ளது. மே மாதம் 6ம் திகதி, பங்கிங்ஹாம் மாளிகையில் ஒன்று கூடும் அரச குடும்பத்தினர் அங்கிருந்து , வெஸ்மினிஸ்டர் அபி என்றழைக்கப்படும் சர்ச்சுக்கு சரியாக மதியம் 11 மணிக்கு வர உள்ளார்கள். இதனை அடுத்து நடைபெறவுள்ள விழாவில், பிஷப் அவர்கள் மன்னருக்கு முடி சூட்டிய பின்னர், அவர் 1.3 மைல் தொலைவுக்கு நடந்து செல்ல உள்ளார். இதனை தான் பொது மக்களால் பார்க்க முடியும்.

 வெஸ்ட் மினிஸ்டர் அபி தேவாலயத்தில் முடி சூடிய பின்னர், சார்ளஸ் மற்றும் கமீலா ஆகியோர் குதிரை வண்டியில் ஏறி, " மால்" வழியாக ரவல்கர் சதுக்கத்தை அடைந்து, பின்னர், பாராளுமன்ற வீதிவழியாக பாராளுமன்றத்தைக் கடந்து, பக்கிங்ஹாம் அரன்மனையை அடைவார்கள். இந்த நீண்ட பாதையில் நாம் நின்றால். சார்ளஸ் மற்றும் கமீலாவை நாம் தெளிவாகப் பார்க முடியும். அப்படிச் செல்ல முடியாதவர்கள் TVல் நிகழ்ச்சியாக இதனைப் பார்க்க முடியும். வழமைக்கு மாறாக இந்த முறை ஸ்கை() TVக்கு நிகழ்ச்சி ஒளிபரப்ப உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்கை TV மூலம் நிகழ்ச்சியை பார்க்க முடியும்.


 இது போக சுமார் 260 வருட பழமையான குதிரை வண்டி ஒன்றில் தான், இம்முறை மன்னர் சார்ளஸ் வருகிறார். இந்த குதிரை வண்டி முழுக்க முழுக்க தங்கத்தினால் ஆனது என்பது குறிப்பிடத்தக்க விடையம். அதன் விலை மட்டுமே பல மில்லியன் பவுண்டுகள் வரும். அது போக மகாராணி அணிந்த கிரீடத்தை விட, பிரத்தியேகமாக வேறு ஒரு கிரீடத்தை இம்முறை சார்ளஸ் அணிய உள்ளார். அதன் விலை 12 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அதில் பச்சை வைரக் கல் உள்ளது. இது மிக மிக விலை உயர்ந்த கல் ஆகும். உலகில் இது போன்ற பச்சை நிற வைரக் கல் வேறு எங்கும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்



புதியது பழையவை

தொடர்பு படிவம்