தமிழீழ தேசிய தலைவர்
பிரபாகரன் அவர்களின்
மகள் துவாரகா,
சுவிஸ் நாட்டில்
வசித்து வருகிறார்.
நம்பவில்லையா ? இதோ வீடியோ கால் போட்டுத்
தருகிறேன் பேசுங்கள்,
என்கிறார் தயா.
(இங்கே மொகட்டை
பார்த்துக் கொண்டு இருக்கும் தயாவின் புகைப்படம்
இணைக்கப்பட்டுள்ளது). வீடியோ காலில்
தோன்றும் துவாரகா,
மாஸ்க் அணிந்து
கொண்டு பேசுகிறார்.
அப்பாவும் நானும்
இருக்கிறோம். நம்பிக்கையோடு இருங்கள் என்கிறார். இந்த
மாதிரி பல
தடவை வீடியோ
காலில் தோன்றிய
இந்தப் பெண்ணை
வைத்து, சுவிஸ்
நாட்டில் மட்டும்
4 லட்சம் சுவிஸ்
பிராங்கை கறந்துள்ளார்கள்.
இதே குழு
லண்டன் புறப்பட்டு
வந்து...
தலைவர் மற்றும் துவாராக
உயிரோடு உள்ளார்கள்.
தலைவர் தங்கியுள்ள
நாட்டிற்கு 3M மில்லியன் பவுண்டுகளை(30கோடி இந்தியப்
பணம்) கொடுத்தால்
அந்த நாடு
தலைவரை அங்கிகரிக்கும்.
என்று கூறி,
லண்டனிலும்
காசைக் கறக்கிறார்கள்.
இவ்வாறு லண்டனில்
சேகரிக்கப்பட்ட பணம், £348,000 பவுண்டுகள்.
இதேவேளை லண்டனில்
உள்ள, பழைய
செயல்பாட்டாளர்கள் சிலர் நாங்கள்
துவாரகாவோடு பேசவேண்டும் என்று கேட்க்க. சுவிசில்
இருந்து வந்த
தயா, மீண்டும்
வீடியோ கால்
போடுகிறார். துவாரகாவோடு பேசிய நபர், நீங்கள்
பல வருடங்களுக்கு
முன்னர் ஐயர்லாந்து
வந்தவேளை உங்களுக்கு
ஒருவர் முதன்
முதலாக கார்
ஓட்ட கற்றுத்
தந்தாரே அவர்
பெயரைச் சொல்ல
முடியுமா என்று
கேட்க்க.
இல்லை எனக்கு ஞாபகம்
இல்லை என்கிறார்
துவாரகா. ஓகே..
உங்களை ஊரில்
ஒருவர் மெய்பாதுகாப்பாளர்
போல கவனித்துக்
கொண்டாரே அவர்
பெயரைச் சொல்ல
முடியுமா ? என்று கேட்க்க. அதுவும் ஞாபகம்
இல்லை என்கிறார்
துவாரகா. இப்படி
3 கேள்விகள் கேட்கப்பட்டது. அது அனைத்தும் உண்மையான
துவாரகாவுக்கே தெரியும். இந்த போலி துவாரகாவுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இதனால் லண்டனில்
தயாவால் மூன்றரை
லட்சம் பவுண்டுகளுக்கு
மேல் பணம்
சேகரிக்க முடியவில்லை.
லண்டனில் தயா
காசை சேகரிக்க,
உதவிய
நபர்கள் புகைப்படங்கள்
கீழே உள்ளது.
இது போக ""பாபு""
என்ற நபரும்
முன்னணியில் இருந்து பணத்தை சேகரித்துள்ளார். ஆனால் அவர் கில்லாடி. தனது
புகைப்படத்தை அவர் சொந்த பேஸ் புக்கில்
கூட போட்டது
கிடையாது.
இவ்வாறு சுமார் 8 லட்சம்
பவுண்டுகளோடு தற்போது தயா என்னும் இந்த
நபர் தலைமறைவாகிவிட்டார்.
இவர்கள் பல
மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளில் காசை திரட்ட
முயன்றவேளை, இந்தக் கோஷ்டிக்கு பெரும் சவாலாக
இருந்தது மக்கள்
நம்பிக்கை தான்.
மக்கள் இவர்களை
நம்பவில்லை. இதனால் விரைவில் ஒரு நல்ல
செய்தி வரும்.
அதன் பின்னர்
நீங்கள் எங்களை
நம்புவீர்கள் என்று தயா கூறி வந்த
நிலையில். தான்.
திடீரென இந்தியாவில்
இருந்து ஐயா
நெடுமாறன் அவர்கள்
தலைவர் உயிருடன்
உள்ளார் என்ற
அறிவித்தலை விடுத்தார். இது பெரும் விவாதங்களை
தோற்றுவித்தது. YouTube சேனல் தொடக்கம் சாட்டலைட்
சேனல் வரை,
மேசை மேலே
இருந்து தலைவர்
இருக்கிறாரா இல்லையா ? என்று விவாதித்தார்கள். அந்த சைக்கிள் கேப்பில் தான்,
தயா மிக
துரிதமாக செயல்பட்டு
லண்டனில் பணத்தை
சேகரிக்க ஆரம்பித்தார்.
இது அவரது
பொற்காலம் என்றும்
சொல்லலாம்.
ஆனால் ஈழத் தமிழர்களை
நன்கு அறிந்தவர்,
அன்று முதல்
இன்றுவரை ஈழத்
தமிழர்கள் போராட்டத்தில்
இணைந்து நிற்பவர்,
அவர் வேறு
யாரும் அல்ல
ஐயா ப.ஏகலைவன் அவர்கள்
மட்டுமே, இது
எல்லாமே பொய்.
வெளிநாட்டில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த
ஒரு குழு
இப்படி நெடுமாறன்
ஐயாவை பேசவைக்கிறார்கள்
என்று அடித்து
ஆணித்தரமாக தனது ""ராவணா""
சேனலில் பேசினார்.
உண்மையை போட்டுடைத்தார்.
இந்த சுவிஸ் நாட்டின்
குழு சென்னை
சென்று தமிழக
தலைவர்களை தூண்டி
விட்டது. ஆனால்
இங்கே ஒரு
விடையத்தை நாம்
கவனிக்கவேண்டும். சென்னைக்குச் சென்ற இந்தக் குழுவை,
தமிழக Q பிரிவு
பொலிசார், சில
மணி நேரத்தில்
பிடித்து சிறையில்
அடைத்திருக்க முடியும். ஆனால் அப்படி அவர்கள்
செய்யவில்லை. காரணம் மத்திய அரசு தான்.
இலங்கை சீனாவின்
பக்கம் நோக்கிச்
சென்று கொண்டு
இருக்கும் இந்த
காலகட்டத்தில், புலிகள் மீண்டும் துளிர்விடப் போகிறார்கள்
என்ற செய்தி
வந்தால். அது
இலங்கை அரசுக்கு,
ஒருவகையான பதற்றத்தை
ஏற்படுத்தும். பின்னர் இலங்கை அரசு இந்திய
அரசின் உதவியை
அல்லது புலனாய்வு
த் தகவல்களை
தரச் சொல்லிக்
கேட்க்கும். இவை எல்லாமே பூகோழ அரசியல்
தான். தேசிய
தலைவரின் வாகன
ஓட்டி நான்
தான் என்று
சொல்லிக் கொள்ளும்
இந்த தயா,
ஊரில் 1990ம்
ஆண்டுக்கு முன்னர்
இயக்கத்தில் இருந்த நபர்.
இவர் தலைவரின் வாகன
ஓட்டி அல்ல.
வேறு ஒரு
போராளியின் ஜீப் டிரைவர். அவ்வளவு தான்.
இன்று "" அகம்"" என்ற கம்பெனி ஒன்றை லண்டனில்
இவர்கள் பதிவு
செய்து உள்ளார்கள்.
மக்களிடம் அடித்த
பணத்தை வெள்ளையாக்க,
இவர்கள் இந்த
கம்பெனியை பாவிப்பார்கள்
என்ற செய்தியும்
எமக்கு கிட்டியுள்ளது.
இன்னும் எத்தனை
காலம் தான்
ஏமாற்றப் போகிறார்கள்
? தலைவர் வீர
மரணம் அடைந்ததை
இன்றுவரை ஏற்றுக்
கொள்ள முடியாமல்
தவிக்கும் உணர்வு
மிக்க ஈழத்
தமிழர்களை, பகடைக்காய்களாக பாவித்து வருகிறது, இது
போன்ற ஒரு
சில கும்பல்.
இதன் காரணத்தால்
கடைசியாக எம்மிடம்
உள்ள மிகவும்
தெளிவான, HD புகைப்படங்களை
வெளியிடுகிறோம். இவை சாட்-சாத் மே
18 எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இதில் மிகத் தெளிவாகத்
தெரிகிறது தேசிய
தலைவர் மேதகு
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீர மரணம்
அடைந்துவிட்டார் என்று. அவர் வாழ்ந்தார், போராடினார்,
இறுதிவரை தளராத
மனத்தோடு தனியாக
களத்தில் நின்றார்.
சுற்றியும் 11,000 அதிரடிப்படைகள். இறுதியாக
வெறும் 150 போராளிகள் அவரை பாதுகாத்து வந்தார்கள்.
ஊடறுத்து முள்ளிவாய்க்கால் ஊடாக காட்டுப் பகுதிக்கு தப்பிச்
செல்ல முற்பட்டவேளை,
வீரச்சாவை தழுவிக்
கொண்டார்கள் என்பது இறுதிப் போராட்டத்தின் நின்ற
சில உறுதியான
போராளிகள் கொடுத்த
வாக்குமூலம். இதனை தமிழ் இனம் ஏற்க்கவேண்டும்.
மாவீரனுக்கு ஏதடா மரணம் ? இறந்தாலும் தலைவர்
கொள்கையை நாம்
பின்பற்றி நிற்க்கும்
போது, அவர்
எம்மோடு தான்
நிற்கிறார் என்பது பலருக்கு புரியும். தினம்
தினம் எங்கள்
மனதில் தான்
அவர் இருக்கிறார்
என்பது தெளியும்.
கடந்து ...செல்வோம்... தமிழர்களுக்கான... உரிமைகளை வெல்வேம்.
"புலிகளின் தாகம் தமிழீழ
தாயகம்""