உக்ரைனுக்குச் சென்ற புட்டின் தனது பவர் என்ன என்று காட்ட பெரும் முயற்ச்சி போல இருக்கே ?


 உக்ரைன் மீது போர் தொடுத்த நாள் முதலாக, பெரும் மறைவிடங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார் புட்டின். காரணம் உக்ரைன் நாட்டில் மிக மிகப் பலமான உளவு அமைப்பு உள்ளது. மேலும் சொல்லப் போனால் உக்ரைன் நாட்டவர்களை பார்த்தால் ரஷ்யர்களை பார்பது போலவே இருக்கும். இவர்கள் ரஷ்யாவுக்குள் ஊடுருவினால் கூட கண்டு பிடிப்பது கஷ்டம். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெரும் மலைத் தொடர் ஒன்றில் உள்ள பங்கரில் தான் பொதுவாக புட்டின் தங்கிவருகிறார் என்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி வந்தது.  (Video attached)

இந்த நிலையில், திடீரென அவர் உக்ரைன் நாட்டினுள் ஹெலி மூலம் சென்றுள்ளார். அதாவது ரஷ்யா கைப்பற்றி வைத்திருக்கும் உக்ரைன் நாட்டின் ஒரு பகுதிக்கு புட்டின் விஜயம் ஒன்றை மேற்கொண்டு, தான் எதற்க்கும் துணிந்தவர் என்று மேற்கு உலகத்திற்கு காட்டியுள்ளார். இது நாள்வரை புட்டின் பதுங்கி இருப்பதாக மேற்கு உலக TVக்கள் பரப்புரை செய்து வந்த நிலையில் இப்படி ஒரு பெரும் ஸ்டண்டை புட்டின் காட்டியுள்ளார். அத்தோடு...

புட்டின் விஜயம் அங்கே நிலைகொண்டுள்ள, ரஷ்ய ராணுவத்திற்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார் போல இருக்கிறது. பல இடங்களில் உக்ரைன் ராணுவம் கடுமையாக தாக்கி வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர இந்த பயணம் உதவும் என்று புட்டின் நினைத்திருக்கலாம். ஆனால் ஒரு நாட்டையோ இல்லை நாட்டின் ஒரு பகுதியை பிடிப்பது பெரிய விடையமே இல்லை. அதனை தக்க வைப்பது தான் மஹா கஷ்டம். 



புதியது பழையவை

தொடர்பு படிவம்