மார்க் லாங் என்னும் 54 வயதுடைய, டிலிவரி ஓட்டுனர் தனது வாகனத்தில் சிக்கி, சுமார் 800 யார் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் இறந்த சம்பவம் பிரிட்டனை உலுக்கியுள்ளது. கிருஸ்டபர் என்ற 31 வயது கிறுக்கன் ஒருவன், றோட்டில் நின்ற வேன் ஒன்றை திருட முற்பட்டுள்ளான். அதனை ஓட்டிச் சென்ற மார்க் லாங் என்ற முதியவர், பார்சலை கொண்டு போய் வீட்டில் டிலிவரி செய்துவிட்டு வரும்வேளை. தனது வேனை யாரோ திருட முற்படுவதைப் பார்த்து, திரத்திச் சென்றுள்ளார்.
அவர் வேன் ஜன்னல் ஊடாக கையை விட்டு திருடனை மடக்க முற்பட்டவேளை. தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இன் நிலையில் அவர் தனது வேனுக்கு அடியில் சென்றுவிட்டார். இதனை அறியாத திருடன் வேனை 800 யார் தூரம் வரை ஓட்டிச் சென்ற பின்னரே, கீழே இருந்து அபலக் குரல் வருவதை அறிந்து வேனை அங்கேயே விட்டு, ஓடிச் சென்றுவிட்டான். இதனால் பல எலும்பு முறிவுக்கு ஆளான மார்க் லாங், வைத்தியசாலையில் அனுமதியாகி, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். CCTV கமரா உதவியோடு பொலிசார், திருடனை கண்டுபிடித்து, நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள்.
கொள்ளை, கொலை செய்ய முற்பட்டமை என்ற 2 பிரிவின் கீழ் பொலிசார் வழக்கை தொடர்ந்துள்ளார்கள். VAN போனால் கிடைத்து விடும். உயிர் போனால் திரும்பக் கிடைக்குமா ? இது தான் நாம் வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வீடு அல்லது வீதியாக இருந்தாலும் சரி, எம்மால் முடியாத ஒன்றைச் செய்ய முனையக் கூடாது.