900 வருட நடைமுறையை மாற்றி இந்து மதகுருவை முடிசூட்டு விழாவில் அனுமதிக்கும் சார்ளஸ் !


 

பிரித்தானியாவில் மே மாதம் 6ம் திகதி, பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளது. மன்னர் சார்ளஸ் அவர்கள் முடிசூட உள்ள நிலையில். இதனை 3 தினங்களாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. பொதுவாக முடி சூடும் நிகழ்வு தேவாலயத்தில் நடைபெறுவது வழக்கம். ஆச் பிஷப் ஆப் கன்டபெரி, என்ற பாதிரியார் தான் முடி சூட்டி வைப்பார். அங்கே வேறு மத குருக்கள் இருக்க கூடாது என்பது ஆதி காலம் தொடக்கம் நடைமுறையில் உள்ளது. பின்னர் மகாராணி காலத்தில் யூதர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு. யூத மத குருக்களை நிகழ்வுகளுக்கு அழைத்தார்கள். ஆனால் தற்போது...

முதன் முறையாக மன்னர் சார்ளஸ் முடி சூட்டு விழாவில், இந்து மத குரு கலந்துகொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மன்னர் சார்ளஸ் வெஸ்மினிஸ்டர் தேவாலய பாதிரிகளுடன் விவாதித்துள்ளார். வேறு மத குருக்களை அழைப்பதில், இவர்களுக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் பிரித்தானியா தற்போது பல மதங்களை , பல மொழிகளை உள்ளடக்கிய ஒரு நாடாக மாறிவிட்டது என்று சார்ளஸ் விவாதித்துள்ளார். காலத்திற்கு ஏற்றால் போல நாமும் மாறவேண்டும் என்று கூறிய சார்ளஸ், வேறு மதங்களை சார்ந்த மத குருக்களை அனுமதிக்கவேண்டும் என்று, பின்னர் கட்டளை பிறப்பித்துள்ளார். 

இதற்கு அமைவாக இந்து மத குரு ஒருவர் செல்ல உள்ளார். இருப்பினும் முஸ்லீம் மத குரு ஒருவர் செல்கிறாரா இல்லையா என்பது தொடர்பாக எந்த அறிவித்தலும் வெளியாகவில்லை. சுமார் 900 ஆண்டு கால நடைமுறையை மன்னர் சார்ளஸ் மாற்றி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்