எஜமான் நல்ல தூக்கத்தில் இருந்தவேளை, பிட் புல் என்ற இன நாய் அவரது வலது காலில் உள்ள விரல் ஒன்றை கடிட்து பாதியை தின்றுவிட்டது. ஆனால் அந்த வலி கூட தெரியாமல் அவர் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். டேவிட் லின்ஸே என்ற 64 வயது நபர் கேம்பிரிஜ் நகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் வளர்த்து வந்த பிட் புல் இன நாய், அவரின் கால் விரலைக் கடித்து விட்டது. பின்னர் எழுந்து பார்க்கும் போது தான் காலில் ரத்தம் கசிவதைப் பார்த்து புரிந்துகொண்ட டேவிட், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அங்கே அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. நாய் கடிக்கும் வரை ஒரு சொட்டு வலியும் இல்லாமல் எப்படி இந்த நபரால் தூங்க முடிந்தது என்று சந்தேகம் கொண்ட மருத்துவர்கள். மேலும் பல பரிசோதனைகளை செய்த நிலையில். அவருக்கு கால் நரம்பில் 2 முக்கியமான இடத்தில் அடைப்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அப்படியே விட்டிருந்தால். இதயத்திற்கு செல்லும் ரத்த அழுத்தம் அதிகரித்து. இதயம் செயல் இழந்து இருக்கும். இதனால் இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அடைப்பை அகற்றியுள்ளார்கள்.
இந்த அடைப்பு காரணமாகவே அவருக்கு கால் விரல்களில் உள்ள உணர்ச்சி, வெகுவாக குறைந்து போய் உள்ளது. இதனால் தான் நாய் கடித்ததை கூட அவரால் உணர முடியவில்லை என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. இருப்பினும் மருத்துவர்கள் நாயை குறை சொல்லவே இல்லை. காரணம் நாய் தான் அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறார்கள். பொதுவாக தோல் பழுதடையும் போது, உண்டாகும் வாசத்தை நாய்களால் நன்றாக உணர முடியும். இதுவும் ஒரு காரணமாக இருக்கக் கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.