ஸ்காட் லாந்து தேசம், அயர்லாந்து தேசம், மற்றும் இங்கிலாந்து என்று 3 ராட்சியங்கள் இணைந்தது தான் ஐக்கிய பிரித்தானியா(United Kingdom). இதில் சுமார் கடந்த 600 வருடங்களாக ஸ்காட் லாந்து தனியாக பிரிந்து செல்லவேண்டும் என்று, ஒரு சாரார் போராடி வருகிறார்கள். மேலும் சிலர் பிரியத் தேவை இல்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். ஆனால் கடந்த 5 வருடங்களாக பிரித்தானியாவுக்கு பெரும் நெருக்கடிகளை கொடுத்தவர் நிக்கோலா ஸ்டோர்ஜான். இவர் படிப்படியாக வளர்ந்து, ஸ்கொட்டிஷ் நஷனல் பார்டியின்(SNP) தலைவராக பதவியேற்றதோடு..
ஸ்காட்லாந்தின் முதலமைச்சராகவும் ஆகினார். இதனூடாக அவர் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரிக்கவே. அவர் ஸ்காட்லாந்து பிரிந்து தனி நாடாக செல்லவேண்டும் என்ற கோரிக்கையை முன் நிறுத்தி, கடுமையான போக்கை கையாள ஆரம்பித்தார். இதனால் பிரித்தானியா பெரும் திண்டாட்டத்திற்கு ஆளானது. எப்படி இந்த நிக்கோலாவை சமாளிப்பது என்று தெரியாமல், டேவிட் கமரூன், பின்னர் வந்த தெரேசா மே அம்மையார், பொறிஸ் ஜோன்சன் என்று அடுத்து அடுத்து வந்த பல பிரித்தானிய பிரதமர்கள் திண்டாடினார்கள்.
இருந்தாலும் பிரித்தானியாவின் உளவுத்துறை என்பது மிக மிக சக்த்திவாய்ந்த ஒரு அமைப்பு. அது அரசாங்கத்தை சீராக நடத்த பல உதவிகளைச் செய்யும். அந்த வகையில், நிக்கோலா தரப்பு ஏதாவது ஒரு சிறிய தப்பைச் செய்கிறதா ? என்று அது ஆராய்ந்து கொண்டே இருந்தது, MI16 உளவுத்துறை.. வருடங்கள் பல ஓடியது. ஆனால் பிழைகள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் போறாத காலம் நிக்கோலாவின் கணவர் ஊடாக வந்துள்ளது. நிக்கோலாவின் கணவர் பீட்டர் முரேல், கட்சி நிதியில் சில கையாடல் செய்த விடையம், தெரியவந்துள்ளது. இதனை நிக்கோலா உடனே சரிசெய்ய முற்பட்டார். இந்த விடையம், வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டு. கடு கதிவேகத்தில் சரிசெய்ய திட்டம் தீட்டினார். ஆனால்...உளவுத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் இது. விடுவார்களா ? உடனே பொலிஸ் விசாரணை ஆரம்பமாகிவிட்டது. இதனால் முதலில் கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் கடந்த 28ம் திகதி விலகினார். பின்னர் எழுந்த அளுத்தம் காரணமாக 29ம் திகதி, முதலமைச்சர் பதவியில் இருந்தும் விலகினார். அவ்வளவு தான் அவரது அரசியல் வாழ்கை, அஸ்தமனமாகிவிட்டது. இப்படித் தான், பல வருடங்களுக்கு முன்னர் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற இளவரசி டயானா, டோடி அல்ஃபாயட் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்தார். கர்பமும் ஆனால். ஆனால் அவருக்கு PARIS நகரில் என்ன நடந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறு சங்கடம் ஏற்படும் போது எல்லாம்..