உலகில் பல பிரபலங்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளார் திபேத்தின் ஆண்மீக தலைவர் தலே லாமா. இவர் சிறுவன் ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்ததோடு மட்டுமல்லாது. தனது நாக்கை நக்குமாறு அச்சிறுவனுக்குச் சொல்லி. வற்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. முதலில் அந்தச் சிறுவன் தயக்கம் காட்டுகிறான். இருப்பினும் அதனைச் செய்யுமாறு தலே லாமா தூண்டுகிறார். பின்னர் .. (Video Attached)
வேறு வழி இன்றி அந்தச் சிறுவன் தலே லாமாவின் நாக்கை தனது வாயால் நக்குகிறான். இப்படியான அருவருக்கத்தக்க செயலை தலே லாமா எப்படிச் செய்யமுடியும் ? என்ற பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது ஒரு வீடியோ மட்டுமே சிக்கியுள்ள நிலையில். தலே லாமாவின் அலுவலகம் இதற்கு மன்னிப்புக் கேட்டுள்ளதோடு. தலே லாமா சும்மா விளையாட்டுக்கு (பகிடியாக) இதனைச் செய்தார் என்று சொல்லி நழுவி விட்டார்கள். 87 வயதாகும் தலே லாமாவின் இந்தச் செயல் தொடர்பாக சர்வதேச ரீதியில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
தலே லாமா தொடர்பாக, விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. இங்கே தலே லாமா செய்துள்ள விடையம் நிச்சயம் சிறுவர் துஷ்பிரயோகம் தான். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. ஏன் எனில் அவர் ஒரு மிகவும் சக்த்திவாய்ந்த பதவியில் இருக்கிறார் அல்லவா.