என்ன தான் அரச குடும்பத்தின் மானத்தை கப்பல் ஏற வைத்தாலும், தனது மகன் மீது இன்னமும் பாசம் காட்டி வருகிறார் அப்பா சார்ளஸ். ஆம் அப்படித் தான் சொல்லவேண்டி இருக்கிறது. இளைய மகன், ஹரி அரச குடும்பத்தை பிரிந்து சென்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நிலையில். பல தடவை அவர் பிரித்தானிய அரச குடும்பத்தை கேவலப்படுத்தியுள்ளார். ஆனால் நடக்கவுள்ள மன்னர் சார்ளசின் முடி சூட்டு விழாவின், அழைப்பிதழில் ஹரி மற்றும் மேகான் ஆகியோர் குடும்பமாக நிற்க்கும் புகைப்படத்தை மன்னர் வெளியிட்டுள்ளார்.
அத்தோடு மட்டும் அல்ல ஹரிக்கும் முடிசூட்டு விழாவுக்கு பிரத்தியேக அழைப்பிதழை அனுப்பியுள்ளார் மன்னர் சார்ளஸ். இருந்தாலும் ஹரி மட்டுமே வந்து கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் மெகான் மார்கள் கலந்துகொள்ளவில்லை. ஒரு வகையில் பார்த்தால் இளவரசர் ஹரியை விட, பிரித்தானிய அரச குடும்பத்தை மிகவும் அவமதித்தவர், மெகான் மார்கள் தான். இப்படி இருக்கையில் எப்படி வந்து நிகழ்வில் கலந்துகொள்வது ?
என்ன தான் அவமானப்படுத்தினாலும் நான் பொறுமையாக இருக்கிறேன் என்று மன்னர் சார்ளஸ் காட்டியுள்ளதோடு. மக்களின் மரியாதையையும் அவர் சம்பாதித்துள்ளார். ஆனால் பிரித்தானியாவில் இளவரசர் ஹரியின் செல்வாக்கு வெகுவாக சரிந்து விட்டது. இறுதியில் பொறுமையும், சகிப்பு தன்மையும், பெருமனசுமே வெல்லும் என்று காட்டிவிட்டார் மன்னர் சார்ளஸ்.