எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதிக்கும் ,சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போதைய அரசாங்கத்திற்கு சிறுபான்மை கட்சிகள் என்ற ரீதியில் எந்த நேரத்திலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.