உக்கிரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்யாவை அண்மித்த, லவன்ஸ்கி என்னும் இடத்தில் பெரும் அளவில் ரஷ்ய ராணுவம் நிலைகொண்டு இருந்தது. சற்றும் எதிர்பாரத வகையில் அங்கே நுளைந்த உக்கிரைன் டாங்கி பெரும் தாக்குதல் ஒன்றை தொடுத்ததால், நூற்றுக் கணக்கான ரஷ்ய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம் குறித்த ரஷ்ய ராணுவத்தினர் அங்கே பதுங்கி இருந்து, ஒரு தாக்குதலுக்கு திட்டமிட்டுகொண்டு இருந்தவேளை. எதிர்பாராத விதமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அதி நவீன ஆளில்லா விமானத்தின் உதவியோடு இந்த தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது உக்கிரைன். இதனால் உக்ரைன் நோக்கி முன்னேற இருந்த ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளில்லா விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணைப்பு.