இன்று லண்டனைச் சுற்றி பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு தருணத்திலும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பொலிசாரும், உளவுத்துறையினரும் கவனமாக உள்ளார்கள். மன்னர் சார்ளசின் பக்கிங்ஹாம் அரன்மனையின் கூரையில் கூட, ஸ்னைப்பர்கள்(குறி சுடும்) நபர்கள் உள்ளார்கள். மேலும் சொல்லப் போனால், மன்னர் சார்ளஸ் செல்லும் வழி எங்கும், உள்ள உயரமான கட்டடங்களில் ஸ்னைப்பர்கள் உள்ளார்கள். இது இவ்வாறு இருக்க..
""இவர் எமது அரசர் அல்ல"" என்ற பதாதைகளை ஏந்திய வண்ணம் பெரும் எடுப்பில் ஆர்பாட்டக்காரர்கள் லண்டனில் குவிந்து வருகிறார்கள். மன்னர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்ற போராட்டக்காரர்கள் பலர் களத்தில் குதித்துள்ளதால். பொலிசார் பலரைக் கைதுசெய்து அந்த இடத்தில் இருந்து அகற்றி வருகிறார்கள். இதனால் மேலும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. சுமார் 10,000 பொலிசார் கடமையில் உள்ள அதேவேளை.
ஆயிரக்கணக்கான ராணுவத்தினரும் கடமையில் உள்ளார்கள். அதுபோக MI-5 , MI-6 உளவுத்துறை அதுபோக அமெரிக்க FBI யின் லண்டன் கிளை என்பன மேலதி பாதுகாப்புகளை வழங்கி வருகிறது. காரணம் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன் தற்போது லண்டனில் உள்ளார்.