அற்புதமான கண்டு பிடிப்பு - கேன்சரில் இருந்து மனிதர்களுக்கு விடுதலை CANCER breakthrough

 


இந்த 21ம் நூற்றாண்டின் அற்புதமான சாதனை இதுவாகத் தான் இருக்க முடியும் என்று சொல்லும் அளவு இந்த விடையம் பேசப்பட்டு வருகிறது. ஆம் அது வேறு ஒன்றும் அல்ல, புற்று நோய்க்கான தீர்வு. புற்று நோய் என்பது, உடலில் எந்த ஒரு பாகத்திலும் ஏற்படலாம். இது ரத்தத்தில் கூட ஏற்படுகிறது. ஏன் ? எதற்காக தோன்றுகிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் அது பரவாமல் தடுக்க முடிகிறதே தவிர. அதனை 100 சத விகிதம் குணப்படுத்த முடிவதில்லை.

 இந்த நிலையில், லண்டனில் உள்ள புற்றுநோய் ஆராட்சி மையம், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. புற்றுநோய் செல்கள்(கலங்கள்) உடலில் பல்கிப் பெருகிறது அல்லவா ? அதற்கு ஏதோ ஒரு வகையில் சக்த்தி கிடைக்க வேண்டும். அவை உடலில் உள்ள எந்த சக்த்தியை பாவித்து பல்கிப் பெருகுகிறது ? என்பதனை பிரித்தானிய ஆராட்சியாளர்கள் கண்டு பிடித்துவிட்டார்கள். இதனூடாக புற்றுநோய் செல்களுக்கு செல்லும் சக்த்தியை தடை செய்ய முடிகிறது. எனவே புற்று நோய் செல்களால் பெருக முடியவில்லை. இதனைக் கண்டு பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது பிரித்தானியா. (SCIENTISTS have found a new way to tackle the deadliest cancer by blocking its energy supply.)

 தற்போது பிரித்தானிய ஆராட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள மருந்து, புற்றுநோய் செல்களுக்கு செல்லும் சக்த்தியை தடைசெய்கிறது. இதனால் புற்று நோய் செல்கள் இன விருத்தி அடையாமல் செயலிழப்பதோடு, இறந்தும் விடுகிறது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை எலி, முயல் போன்ற உயிரினங்களில் தற்போது பரிசோதனை செய்து வருகிறார்கள். விரைவில் இந்த மருந்து கடைகளில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இனி கேன்சருக்கு குட் பை சொல்லி விடலாம்.

புதியது பழையவை

தொடர்பு படிவம்