அப்பா நான் வரவில்லை... எனக்கு இது பிடிக்கவும் இல்லை என்கிறார் 19 வயது கோடீஸ்வரன் வீட்டிப் பிள்ளை. ஆனால் அப்பா கட்டாயப்படுத்துகிறார். சரி தந்தையர் தினம்(Fathers day) வேறு , அந்த அன்பு பரிசாக செல்வோம் என்று மகன் முடிவு செய்கிறார். ஆனால் கடைசியில் அப்பாவும் மகனும் மேலும் 3 பேரும் உடல் வெடித்து கடலுக்கு அடியில், 4,000 மீட்டரில் இறந்து விடுகிறார்கள். அவர்களின் கடைசி செக்கன் எப்படி இருந்தது ? டைட்டன் என்ற அந்த நீர் மூழ்கிக் கப்பல், புழு நசுங்குவது போல நசுங்கி இருக்கிறது. அதில் உள்ள 5 மிக முக்கிய பாதுகாப்பு கட்டமைப்புகள் பாவிக்க முடியாமல் போனது எப்படி ? வாருங்கள் விரிவாகப் பார்கலாம் ! இளகிய மனம் கொண்டவர்கள் இதனை வாசிக்க வேண்டாம் !
1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி டைட்டானிக் என்ற மாபெரும் கப்பல், கனடாவுக்கு தொலைவில் 400 மைல்களுக்கு அப்பால் கடலில் மூழ்கியது. சுமார் 1,500 பேர் இறந்து போனார்கள். அன்று முதல் கொண்டு இந்த இடம் ஒரு நரகக் கடலாகவே உள்ளது. ஐஸ் கட்டிகள் நிறைந்த ஒரு கடல், அடிக்கடி இன்று கூட பல கப்பல்கள் அந்த இடத்தில் விபத்தில் சிக்கி வருகிறது. ஆனால் இது எதனையும் கருத்தில் கொள்ளாமல், ""ஓஷன் கேட்"" என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்று, கடலுக்கு அடியில் ஆளத்தில் உள்ள இந்த டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை, செல்வந்தர்களுக்கு காட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது.
குறித்த ஓஷன் கேட் நிறுவனம் பாவித்த நீர் மூழ்கிக் கப்பலின் பெயர் தான் "டைட்டன்". இதில் 5 பேர் பயணம் செய்ய முடியும். இருக்கைகள் இல்லை. நிலத்தில் தான் அமரவேண்டும். மேலும் ஒரு கழிவறை உள்ளது. 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் உள்ளது. முதலாவது பாதுகாப்பு திட்டம், தொடர்பு சாதனங்கள். 2வது பாதுகாப்பு திட்டம் சான்ட் பேக்(sand bag) என்று அழைக்கப்படும் ஒரு உறை போன்ற அமைப்பு. இதனை அணிந்தால், நீர் மூழ்கியின் அவசர பாதை ஊடாக வெளியே தப்பிக்க முடியும். 3வது பாதுகாப்பு, இரண்டு அடுக்கு கவசம். கடலுக்கு அடியில் செல்லும் போது, கடுமையான அழுத்தத்தை இது சமாளிக்க வல்லது. முதலாவது கவசம் பாதிப்பு அடைந்தால் உடனே தெரியவரும். இப்படி 5 பாதுகாப்பு கட்டமைப்புகள் இருந்துள்ளது. முழுக்க முழுக்க டைட்டானியம் உலோகத்தால் ஆனது. இது இரும்பை விட மிக மிக கடினமானது.
பிரித்தானியாவைச் சேர்ந்த மில்லியனர்( பாக்கிஸ்தான் பூர்வீகம்) தாவுத்(48) அவரது 19 வயது மகன், ஓஷன் கேட் உரிமையாளர் "ரஷ்" , போல் ஹென்றி(77) மற்றும் ஹமிஷ் ஹாடிங் என்று 5 பேர் சென்றுள்ளார்கள். இவர்கள் அனைவருமே பெரும் செல்வந்தர்கள். ஒரு பயண டிக்கெட்டின் விலை 2 கோடி இந்திய ரூபா நிகராகும். அதாவது 2 லட்சம் பவுண்டுகள். இவர்கள் ஜூன் 18ம் திகதி மதியம் 12 மணிக்கு(லண்டன் நேரம்) கடலுக்குள் சென்றுள்ளார்கள். ஆனால் புறப்பட்டு 2 மணி நேரமாகியும் நீர் மூழ்கியில் இருந்து எந்த ஒரு சமிஞ்சையும் வரவில்லை. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறை சமிஞ்சை வந்திருக்க வேண்டும். ஆனால் கடல் மட்டத்தின் மேல், இருந்த கண்காணிப்பு குழு 2 மணி நேரமாக என்ன செய்தார்கள் என்பது இன்றுவரை கேள்விக் குறியாக உள்ளது.
கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, தொடர்ந்து நீருக்கு அடியில் செல்ல ஆரம்பித்து விட்டது. 3,500 மீட்டர் பின்னர் 4,000 மீட்டருக்கு மேல் கடலுக்கு அடியில் செல்ல ஆரம்பித்து விட்டது. இந்த முழு உலகில் உள்ள கடல் தண்ணீர் எல்லாம் இணைந்து ஒன்றாக, டைட்டன் கப்பலை தாக்க ஆரம்பித்து இருக்கும். ஏன் என்றால், அந்த கப்பலுக்கு உள்ளே இருந்த வெற்றிடம் தான் காரணம். அதில் இருந்த காற்று. இதனால் இந்த வெற்றிடத்தின் மீது பல லட்சம் மெற்றிக் தொன் அழுத்தம் உடனே பிரயோகிக்கப்பட்டு இருக்கும். கப்பல் தொடர்ந்து கீழே செல்லச் செல்ல, டைட்டன் , கப்பல் அப்படியே ஒரு புழு போல நசுங்கி இருக்கும். (ஒரு தண்ணி லாரியின் சில்லில் சிக்கிய புழு போல). திடீரென சுவர்களை உடைத்துக் கொண்டு நீர் உள்ளே நுளைந்து இருக்கும். கண் இமைக்கும் பொழுதில் அந்த 5 பேரின் உயிரும் பரிதாபமாகப் போய் இருக்கும். கடவுளே நினைத்தாலும் காப்பாற்றி இருக்க முடியாது.
காசைக் கொடுத்து , காசை செலவு செய்து தங்கள் உயிரை தாமே மாய்த்துக் கொள்வது இது தான். பாரா ஷூட்டில் இருந்து குதிப்பது, பஞ்சி ஜம் என்று காலில் ரப்பரை மாட்டிக் கொண்டு குதிப்பது என்று படு பயங்கரமான விளையாட்டுகள் உள்ளது. இவை கருணம் தப்பினால் மரணம் என்ற விளையாட்டுகள். ஒரு செக்கனில் உயிரைக் குடித்துவிடும். வாழ்கை என்பது வாழத் தான். அதனை நல்ல விதத்தில் அனுபவிக்கலாமே ? இதில் வினோதமான விடையம் என்ன தெரியுமா ? நாம் உண்ணும் கணவாய், மற்றும் சுறா மீன் போன்ற உயிரினங்கள் 5,000 அல்ல 13,000 மீட்டர் வரை கடல் ஆளம் செல்ல வல்லவை. அவை அவ்வாறு இயற்கையாக அமைந்துள்ள உயிரினம். ஆனால் மனிதரால் அப்படி இருக்க முடியாது. எனவே எமக்கு என்ன செய்ய முடியுமோ அதனை செய்வதே நல்லது !
பணம் இருக்கிறது என்று, ஆபத்தான விடையங்களை செய்ய முற்படும் சிலருக்கு இது ஒரு நல்ல பாடம். அந்த மயாணக் கடலில் இறந்து போன 5 பேர் ஆத்ம சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம் !