2 தாக்குதலுக்கும் தொடர்பு -TRUMP HOTEL லையும் தகர்க்க முயற்ச்சி ஆனால் சரியாக வெடிக்கவில்லை !


 

அமெரிக்காவில் புது வருடம் அன்று, 2 தாக்குதல்கள் நடந்துள்ளது. லூசியான மாநிலத்தில், ரக் வண்டி ஒன்று வந்து மக்கள் மீது மோதி 10 பேர் இறந்துள்ளார்கள். இதனை படு வேகமாகச் செலுத்தி வந்த ஜபார் என்ற நபர், ISIS கொடியைக் கட்டுக் கொண்டு வந்து மக்கள் மீது மோதியுள்ளார். இவர் வாடகை ரக் வண்டி ஒன்றை எடுத்தே இவ்வாறு செய்துள்ளார். இவர் பாவித்த அதே APP-பை பாவித்து, லாஸ் வேகசில், டெஸ்லாவின் சைபர் ரக் வண்டி ஒன்றும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பல வெடி பொருட்களை நிரப்பிச் சென்று, ரம் ஹோட்டலுக்கு முன்னர் நிறுத்தியுள்ளார் ஒரு நபர். அது வெடித்து சிதறியதில் ஹோட்டலுக்கு பெரிய பாதிப்பு எதுவும் நிகழவில்லை. மேலும் பொலிசார் டெஸ்லாவின் சைபர் ரக் வண்டியை சோதனை செய்த வேளை, அதில் இருந்த சில வெடி பொருட்களே வெடித்துச் சிதறியுள்ளதும். சில பொருட்கள் வெடிக்காமல் இருப்பதையும் கண்டு பிடித்துள்ளார்கள்.

குறித்த 2 தாக்குதலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று FBI-அறிவித்துள்ளதோடு. மிகவும் நுட்ப்பமான முறையில் இதனை விசாரணை செய்து வருகிறது FBI. ஜபார் போன்ற எத்தனை சிலீப்பர் செல்கள் இன்னும் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை !

புதியது பழையவை

தொடர்பு படிவம்