20 லட்சம் மதிப்புள்ள வைரக் கல் ஒன்றை நரேந்திர மோடி ஜில் பைடனுக்கு கொடுத்து தாஜா செய்துள்ளார் !



ரும் 20ம் திகதியோடு வெள்ளை மாளிகையை விட்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வெளியேற வேண்டும். இதேவேளை அன்றைய தினம் டொனால் ரம் மற்றும் அவரது மனைவி மெலீனா ரம் ஆகியோர் குடி வருவார்கள். இதனால் பைடனின் இறுதிக் கணக்குகள் பார்கப்பட்டு வருகிறது. அவர் தனக்கு கிடைத்த நன்கொடைகள், மற்றும் பரிசுகள் என்பனவற்றை, கணக்கில் காட்ட வேண்டும். இது தான் பெரும் வெடி குண்டாக மாறியுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 20 லட்சம் இந்திய மதிப்பிலான ஒரு, அதி அற்புதமான வைரக் கல் ஒன்றை, ஜில் பைடனுக்கு பரிசாக கொடுத்துள்ளார். இதுவே அவர்கள் இதுவரை பெற்றுக் கொண்ட பரிசுகளில் மிகவும் விலை உயர்ந்த பரிசு என்று கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் உயர்ஸ்தானிகர் 12 லட்சம் பெறுமதியான நகைகளை ஜில் பைடனுக்கு கொடுத்துள்ளார். எகிப்திய அதிபர் 4 லட்சம் பெறுமதியான ஆல்பம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதனைத் தவிர தென் கொரிய அதிபர் 5 லட்சம் பெறுமதியான நகைகளை கொடுத்துள்ளார். 

இப்படி பலதரப்பட்ட தலைவர்கள், ஜோ பைடனுக்கும் மனைவி ஜில் பைடனுக்கு லட்சக் கணக்கில் பரிசுகளை வாரி வழங்கியுள்ளார்கள். இப்ப புரிகிறதா ? ஏன் ஜில் பைடன் தனது தள்ளாடும் மற்றும் ஞாபக மறதியில் தவியாய் தவிக்கும் கணவனை 2ம் தடவையும் , ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்க முனைந்தார் என்று ? ஆசை யாரைத் தான் விட்டு வைத்தது ?

Source : Jill Biden receiving the single most expensive present: a $20,000 diamond from India’s leader.

புதியது பழையவை

தொடர்பு படிவம்