சூர்யாவின் சக்த்தி பிலிம் பக்டரி 48 கோடி ரூபா கடனில் உள்ளதாக தகவல் கங்குவா தான் காரணம்



நடிகர் சூரியா மற்றும் அவரது சகோதரர் கார்த்தி ஆகியோர் நடிக்கும், படங்களை அதிகமாக ரிலீஸ் செய்வது சக்தி பிலிம் பக்டரி. இது நடிகர் சூரியாவின் பினாமிக் கம்பெனி என்று சொல்லப்படுகிறது. சில படங்கள் ரிலீஸ் ஆக முன்னரே, திரை அரங்குகளிடம் இவர்கள் அட்வான்ஸ் பணம் பெற்று விடுகிறார்கள். ஆனால் கங்குவா படம் சரியாக ஓடாத காரணத்தால், சக்த்தி பிலிம் பக்டரி, வாங்கிய முன் பணத்தை கொடுக்க நேரிட்டுள்ளது. 

இதேபோல மெய்யழகன் படத்திலும் குறித்த கம்பெனி முன் பணம் வாங்கி இருந்தது. இதில் 9 கோடி ரூபாவை அவர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்க உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டி உள்ளதாம். இதன் காரணத்தால் மேற்கொண்டு, எந்த ஒரு படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாத ஒரு சூழ் நிலைக்கு, சக்த்தி பிலிம் பக்டரி தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. சூரியாவைப் பொறுத்தவரை அவர் கங்குவா படத்தை மிகவும் நம்பி இருந்துள்ளார். படம் கோடிக் கணக்கில் வசூலை அள்ளும் என்று அவர் எதிர்பார்த்து இருந்துள்ளார்.

ஆனால் படம் எந்த அளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியது என்பது ஊர் அறிந்த விடையம். ஒரு கட்டத்தில் விமர்சனங்களை பொறுக்க முடியாமல் சூரியாவும் அவர் மனைவி ஜோதிகாவும் சில கருத்துக்களை வெளியிட்டும் இருந்தார்கள். 

புதியது பழையவை

தொடர்பு படிவம்